Friday, May 8, 2015

புத்தன்

புத்தன் பெயர்
தருமராசன், முனீந்திரன், சினன், ததாகதன், ஆதிதேவன், சாக்கியன், சைனன், விநாயகன், சினந்தவிர்த்தோன், அரசுநீழலிலிருந்தோன், வரன், பகவன், செல்வன்அண்ணல், மாயாதேவிசுதன், அகளங்கமூர்த்தி, கலைகட்கெல்லாநாதன், முக்குற்றமில்லோன், எண்ணில்கண்ணுடையோன், வாமன், புண்ணியமூர்த்தி, புண்ணிமுதல்வன், சாந்தன், பூமிசை நடந்தோன்.

பிரமன்

பிரமன் பெயர்:
மேதினி படைத்தோன், பிதாமகன், பிதா, விதாதா, வரன், அயன், மலரோன், மண்பொதுத்தந்தை, வேதா, இரணியகருப்பன், போதன், மாலுந்திவந்தோன், குரவன், ஓதிமயமுயர்ந்த கொடியினன், அன்னவூர்திஇறை, சதானந்தன், எண்கணன், விதி, சுயம்பு, மறையவன், அநந்தன், ஞானி, மான்மகன், வாணிகேள்வன், பகவன், வானோர் முதல்வன், நான்முகன், விரிஞ்சன், கமலயோனி.

அரி

அரியின் பெயர்:
மாதவன், மாயன், வாமனன், வாசுதேவன், சீதரன், நந்தகோபன்மகன், உவணகேதனன், பதுமநாபன், கேசவன், பஞ்சவர்க்குத்தூதன், சார்ங்கபாணி, சங்கமேந்திகொண்டல்வண்ணன், காகுத்தன், கோவிந்தன், அச்சுதன், மால் விண்டு, வேலையிற்றுயின்றோன், உந்திபூத்தோன், துழாய்மௌலி, ஆதிவராகன், வைகுண்டநாதன், முண்டகாசனைகேள்வன், தாமோதரன், முராரி, நேமிவலவன், தேவகிமைந்தன், வனமாலி, படியிடந்தோன், கலசலோசனன், அனந்தசயனன், பீதாம்பரன், உலகளந்தருள்வோன், பஞ்சாயுதன், உலகுண்டபெம்மான், அலகைமுலையோடாவியருந்தினோன், நாரசிங்கன்அரவணைச்செல்வன், கண்ணன், அறிதுயிலமர்ந்தமூர்த்தி, பிரமனைப் பெற்றதாதை, பின்னைகேள்வன், முகுந்தன், கரியவன், நெடியோன், காவற்கடவுள், நாரணன்.