Friday, February 6, 2015

தெய்வத் திருமலை

தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவ னேமற வேனுனையா
னைவர்க் கிடம்பெறக் காலிரண் டோட்டி யதிலிரண்டு
கைவைத்த வீடு குலையுமுன் னேவந்து காத்தருளே.

தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழும் சுடரே (தெய்வீகச் சுடரே);
வை வைத்த வேற்படை (கூர்மையான வேலாயுதத்தை உடையனே);
வானவ னே (கடவுளே);
மறவேன் உனை யான் (உன்னை மறக்கமாட்டேன்);
ஐவர்க்கு இடம்பெற (புலன்களை ஐந்துக்கும் இடம் கொடுக்க);
காலிரண் டோட்டி (கால்கள் இரண்டை கொடுத்து);
அதிலிரண்டு கைவைத்த (அதில் இரண்டு கைகளையும் கொடுத்த);
வீடு குலையும் முன்னேவந்து (இந்த உடல் என்னும் வீடு அழியும் முன்னே வந்து); காத்தருளே. (காக்கவேண்டும் முருகப் பெருமானே!);