கந்தரலங்காரம்-100
இடுதலைச் சற்றும் கருதேனைப்
போதம் இலேனை அன்பால்
கெடுதல் இலாத் தொண்டரில்
கூட்டியவா கிரௌஞ்ச வெற்பை
அடுதலைச் சாதித்த
வேலோன் பிறவி அற இச்சிறை
விடுதலைப் பட்டது
விட்டது பாச வினை விலங்கே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல்-100)
“வறியவர்களுக்கு ஈவதை
சற்றும் நினைத்துப் பார்க்காதவனும், அறிவு இல்லாதவனாகிய என்னை, உன் அன்பால்,
கெடுதல் இல்லாத உன் தொண்டர்களிடம் சேர்த்துவிட்டு எனக்கு அருள் செய்தாய் கந்தா!
கிரௌஞ்ச மலையையே அழித்துச் சாதித்த வேலாயுதனே! எனது பிறவித் துன்பம் அற்றுப் போக,
இந்தப் பிறவி என்னும் சிறையிலிருந்து விடுதலை செய்துவிட்டாய்! அதனால், இந்த பாச
வினை என்னும் விலங்கு என்னிடமிருந்து விடுபட்டது!”
இடுதலைச் சற்றுங்
கருதேனைப் போதமி லேனையன்பாற்
கெடுதலி லாத்தொண்டரிற்
கூட்டியவா கிரௌஞ்ச வெற்பை
யடுதலைச் சாதித்த
வேலோன் பிறவி யறவிச்சிறை
விடுதலைப் பட்டது
விட்டது பாச வினைவிலங்கே.
(கந்தரலங்காரம்-100)
**
No comments:
Post a Comment