Sunday, March 6, 2016

கந்தரலங்காரம்-101


கந்தரலங்காரம் - நூற்பயன் பாடல்-101

சலம் காணும் வேந்தர் தமக்கும் அஞ்சார் யமன் சண்டைக்கு அஞ்சார்
துலங்கா நரகக்குழி அணுகார் துட்ட நோய் அணுகார்
கலங்கார் புலிக்கும் கரடிக்கும் யானைக்கும் கந்த நன்னூ
லலங்கார நூற்றுளொரு கவிதான் கற்றறிந்தவரே.

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-101)
“சினம் காட்டும் வேந்தர்களுக்கும் அஞ்ச மாட்டார்; யமனின் சண்டைக்கும் அஞ்ச மாட்டார்; இருள் சூழ்ந்த நரகம் என்னும் குழியையும் அடைய மாட்டார்; கொடும் நோய்கள் என்னும் துன்பத்தையும் அடைய மாட்டார்; புலிக்கும், கரடிக்கும், யானைக்கும் கலங்க மாட்டார்; கந்தப் பெருமானின் பெருமைகளைக் கூறும் இந்த நூலாகிய கந்தரலங்காரத்தின் நூறு பாடல்களில் ஒரு பாடலையேனும் கற்று அறிந்தவருக்கு!”

சலங்காணும் வேந்தர்தமக்கு மஞ்சார் யமன் சண்டைக்கஞ்சார்
துலங்கா நரகக் குழியணு கார்துட்ட நோயணுகார்
கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தநன்னூ
லலங்கார நூற்றுளொரு கவிதான் கற்றறிந்தவரே.
(கந்தரலங்காரம்-101)

**

No comments:

Post a Comment