கந்தரலங்காரம்
(அதிகப் பாடல்)-102
திருவடியும் தண்டையும்
சிலம்பும் சிலம்பு ஊடுருவப்
பொருவடி வேலும் கடம்பும்
தடம்புயம் ஆறிரண்டு
மருவடிவு ஆன வதனங்கள்
ஆறும் மலர்க்கண்களும்
குருவடிவாய் வந்து
என் உள்ளம் குளிரக் குதிகொண்டவே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல்-102)
“கந்தனின்
திருவடியும், அந்த திருவடியில் அணியும் தண்டையும், அதிலுள்ள சிலம்பும், அந்தச்
சிலம்பில் ஒலிக்கும் ஒலியும், மலையை ஊடுருவிப் போய் துளைத்த வேலும், கடம்ப மலர்
மாலைகளும், அந்த மாலைகளைத் தாங்கும் விசாலமான பன்னிரண்டு புயங்களும் (தோள்களும்)
பொருந்திய மருவடிவான வதனங்கள் என்னும் அந்த ஆறு முகங்களும், அதிலுள்ள மலர் கண்களும்,
குரு வடிவாக வந்து எழுந்தருளியதால், என் மனம் குளிர்ந்து, குதியாட்டம் போட்டதுவே!”
திருவடியுந்
தண்டையுஞ் சிலம்புஞ் சிலம்பூடுருவப்
பொருவடி வேலுங் கடம்புந்
தடம்புய மாறிரண்டு
மருவடி வானவ
தனங்களாறு மலர்க்கண்களுங்
குருவடி வாய்வந் தெனுள்ளங்
குளிரக் குதிகொண்டவே.
**
No comments:
Post a Comment