கந்தரலங்காரம்105 (அதிகப்பாடல்-105)
ஆவிக்கு மோசம் வருமாறு
அறிந்து உன் அருட்பதங்கள்
சேவிக்க என்று
நினைக்கின்றிலேன் வினை தீர்த்தருளாய்
வாவித் தட வயல் சூழும்
திருத்தணி மாமலை வாழ்
சேவற் கொடியுடை யானே அமர
சிகாமணியே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல்-105
“உயிருக்கு மோசம்
வரும் காரணமான வினைப் பயனை அறிந்தும், உன் அருள் பாதங்களை வணங்குவதை நினைத்துக்
கொண்டே இருக்கிறேன்; எனது வினைப் பயனைத் தீர்த்து அருள் புரிவாய் கந்தா! வாவி
என்னும் குளங்களும், வயல்களும் சூழ்ந்துள்ள திருத்தணி மாமலையில் வாழும் சேவல் கொடியை
உடைய கந்தா! அமரர் என்னும் தேவர்களின் மணி முடியாகத் திகழ்பவரே!”
ஆவிக்கு மோசம் வருமா றறிந்துன்
னருட்பதங்கள்
சேவிக்க வென்று
நினைக்கின்றி லேன்வினை தீர்த்தருளாய்
வாவித் தடவயல் சூழுந் திருத்தணி மாமலைவாழ்
சேவற் கொடியுடை யானே
யமர சிகாமணியே.
**
No comments:
Post a Comment