கந்தரலங்காரம்-
அதிகப்பாடல்-104
செங்கேழ் அடுத்த சின வடி
வேலும் திருமுகமும்
பங்கே நிரைத்த நல் பன்னிரு
தோளும் பதும மலர்க்
கொங்கே தரளம் சொரியும்
செங்கோடைக் குமரனென
எங்கே நினைப்பினும் அங்கே
என்முன் வந்து எதிர் நிற்பனே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல்-104)
“செந்நிறமுடைய,
பகைவர்கள் மீது சினமுடைய, வடிவேலும், அழகிய முகங்களும், பக்கங்களில் நிறைத்து
நிற்கும் பன்னிரண்டு தோள்களும், பதும மலர் என்னும் தாமரை மலரின் நறுமணம் சொரியும்,
செங்கோடை என்னும் திருச்செங்கோட்டில் குடிகொண்டிருக்கும் குமரனே! உன்னை எங்கே
நினைத்தாலும் அங்கே என் முன்னர் வந்து எதிர் நின்று அருள்புரிகின்றாய்!”
செங்கேழடுத்த சினவடி
வேலுந் திருமுகமும்
பங்கே நிரைத்தநற் பன்னிரு
தோளும் பதும மலர்க்
கொங்கே தரளஞ் சொரியுஞ்
செங்கோடைக் குமரனென
வெங்கே நினைப்பினு
மங்கே யென்முன் வந்தெதிர் நிற்பனே.
**
No comments:
Post a Comment