கந்தரலங்காரம்-64
பட்டிக் கடாவில்
வரும் அந்தகா உனைப் பார் அறிய
வெட்டிப்
புறங்கண்டலாது விடேன் வெய்ய சூரனைப் போய்
முட்டிப் பொருத
செவ்வேற் பெருமாள் திருமுன்பு நின்றேன்
கட்டிப் புறப்படடா
சத்திவாள் என்றன் கையதுவே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல்-64)
"பட்டிக் கடா
என்னும் எருமைக்கடாவில் வரும் அந்தகன் என்னும் எமனே, உன்னை
இந்த உலகம் அறிய உன்னை வெட்டி, புறமுதுகிட்டு ஓடும்படி
செய்யாமல் விடமாட்டேன்; கொடிய சூரனைப் போய் முட்டி போர்
செய்து, சிவந்த வேலாயுதத்தை உடைய முருகப் பெருமானின் முன்பு
நிற்கிறேன்! உன் எல்லா ஆயுதங்களையும் கட்டிக் கொண்டு புறப்படடா; என் கையில் சத்தியாகிய வாள் உள்ளது!"
பட்டிக்கடாவில்
வருமந்தகாவுனைப் பாரறிய
வெட்டிப்
புறங்கண்டலாது விடேன் வெய்யசூரனைப்போய்
முட்டிப் பொருத
செவ்வேற் பெருமாடிருமுன்பு நின்றேன்
கட்டிப் புறப்படடா
சத்திவாளென்றன் கையதுவே.
(கந்தரலங்காரம்-64)
No comments:
Post a Comment