கந்தரலங்காரம்-63
பாதித் திரு உருப் பச் சென்றவர்க்குத் தன் பாவனையைப்
போதித்த நாதனைப் போர் வேலனைச் சென்று போற்றி உய்யச்
சோதித்த மெய்யன்பு பொய்யோ அழுது தொழுது உருகிச்
சாதித்த புத்தி வந்தெங்கே எனக்கு இங்ஙன் சந்தித்ததே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-63)
"பாதி உருவத்தை (உமாதேவியை) பக்கத்தில் வைத்திருப்பதால், பச்சை வண்ணத்தில் இருக்கும் சிவனுக்கு, பாவனை என்னும் பிரணவ மந்திரத்தைப் போதித்த நாதனான முருகனை, போர் வேலனை, போற்றி உயர்வடைய, சோதித்த மெய்யான அன்பு பொய்யாகுமோ? அழுது, தொழுது, உருகி, சாதித்த புத்தி எனக்கு இங்கே எப்படி வந்தது?"
பாதித் திருவுருப்பச் சென்றவர்க்குத்தன் பாவனையைப்
போதித்தநாதனைப் போர் வேலனைச் சென்று போற்றியுய்யச்
சோதித்த மெய்யன்பு பொய்யோவழுது தொழுதுருகிச்
சாதித்த புத்திவந்தெங்கேயெனக் கிங்ஙன் சந்தித்ததே.
(கந்தரலங்காரம்-63)
No comments:
Post a Comment