கந்தரலங்காரம்-62
ஆலுக்கு அணிகலம் வெண்
தலை மாலை அகிலம் உண்ட
மாலுக்கு அணிகலம் தண்ணம்
துழாய் மயிலேறும் ஐயன்
காலுக்கு அணிகலம்
வானோர் முடியும் கடம்பும் கையில்
வேலுக்கு அணிகலம்
வேலையும் சூரனும் மேருவுமே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல்-62)
"ஆல் என்னும்
சிவனுக்கு அணிகலன் வெண்மையான கபால மாலை
ஆகும்! அகிலத்தையே உண்ட திருமாலுக்கு அணிகலன் தண் என்னும் குளிர்ந்த துழாய்
என்னும் துளசி மாலை! மயில் வாகனத்தில் ஏறும் ஐயனான முருகனின் காலுக்கு அணிகலன்
வானோராகிய தேவர்கள் மணிமுடியும், கடம்ப மாலையும்! அவன்
கையில் இருக்கும் வேலுக்கு அணிகலன், வேல் என்னும் கடலும்,
சூரனும், மேரு மலையுமே!"
ஆலுக்கணிகலம்
வெண்டலைமாலை யகிலமுண்ட
மாலுக்கணிகலந்
தண்ணந்துழாய் மயிலேறுமையன்
காலுக்கணிகலம் வானோர்
முடியுங்கடம்புங் கையில்
வேலுக்கணிகலம்
வேலையுஞ் சூரனுமேருவுமே.
(கந்தரலங்காரம்-62)
No comments:
Post a Comment