நீர்நிலை = படுகர், தாங்கல், கேணி, பல்வலம், படு,பட்டம், மடு, உவளகம்,
பண்ணை, வாவி, சுனை, வட்டம்,தடம், கயம், பயம், தடாகம்,
குளம், குட்டம், கிடங்கு,சூழி, அலந்தை, குண்டம், பங்கம், இலஞ்சி,
கோட்டகம்,பொய்கை, எல்வை, ஓடை, ஏரி.
தெளிந்தநீர் = சற்சலம்.
ஆற்றின் இடை = இலங்கை, துருத்தி, அரங்கம்.
நீர்க்குமிழி = துரை, மொக்குள், பௌவம், புற்புதம்,கொப்புள்.
நுரை = பேனம்.
நீர்ச்சுழி = உந்தி.
வெள்ளம் = பிரளயம், வாரி, நீத்தம், பெருக்கு, ஓதம்,ஓகம்.
நிறைபுனல் = வழாறு, பிராறு.
நீந்துபுனல் = அகாதம்.
கலங்கனீர் = கலுழி, ஆவிலம்.
ஆழம் = குண்டு, அழுந்து, கயம், கம்பீரம்.
நீரோட்டம் = கோலம்.
கிணறு = கூபம், கூவல், அசும்பு.
ஊறுபுனல் = (ஊறும் நீர்) அஃகி, உறவி, ஊற்று.
ஊரார் உண்ணும் நீர் = ஊருணி.
No comments:
Post a Comment