Showing posts with label வள்ளலார். Show all posts
Showing posts with label வள்ளலார். Show all posts

Wednesday, February 24, 2016

வள்ளலார் வேண்டுதல்

வள்ளலார் வேண்டுதல்

அப்பா நான் வேண்டுதல் கேட்டு
அருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம் நான்
அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான்சென்றே
எந்தை நினது அருள் புகழை
இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேற் சுத்தசிவமார்க்கந்
திகழ்ந்தோங்க அருட்பெருஞ்ஜோதி
செலுத்திடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைவநினைப் பிரியாத
நிலைமையும் வேண்டுவனே.
**