Saturday, December 27, 2014

புல்லின்வாய் கீண்டானை


புல்லின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை | 
கில்லிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய் | 
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார் | 
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று | 
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய் | 
குள்ளக் குளிரக் குடைந்து நீர் ஆடாதே | 
பள்ளிக்கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால் | 
கள்ளம் தவிர்த்து கலந்தேலோர் எம்பாவாய்.

Friday, December 26, 2014

கனைத்திளங் கற்றெருமை

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

Thursday, December 25, 2014

கற்றுக் கறவை

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!

Wednesday, December 24, 2014

தூமணி மாடத்து...

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாழ் திறவாய்! 
மாமீர்! அவளை எழுப்பீரோ? உம் மகள் தான் 
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ 
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ 
மாமாயன் மாதவன்  வைகுந்தன் என்றென்று 
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.

Monday, December 22, 2014

கீழ்வானம் வெள்ளென்று...

கீழ்வானம் வெள்ளென்று எறுமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக் கூவுவான் வந்து நின்றோம் கோது கலமுடைய பாவாய் எழுந்திறாய் பாடிப் பறை கொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆவாவென் றாராய்ந் தருளாலோ ரெம்பாவாய். (திருப்பாவை)

Sunday, December 21, 2014

புல்லாகிப்

புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்! எம்பெருமான்!