Thursday, June 2, 2016

நளன்-தமயந்தி

நிஷத தேசத்தின் மன்னர் வீரசேனன்; இந்த மன்னர் வீரசேனனின் மகனே நளன்; நளனின் மனைவி தமயந்தி; இவர்களின் மகன் இந்திரசேனன்: மகள் இந்திரசேனை;
மன்னர் நளன், கொடையிலும், கல்வியிலும், அழகிலும், ஆண்மையிலும், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மன்னர்;
இவன் கீர்த்தி எல்லா நாடுகளுக்கும் பரவியது; அதை ஒரு அன்னப்பறவை வேறு நாட்டில் உள்ள தமயந்திக்கு. நளனின் சிறப்புகளைச் சொல்கிறது.
தமயந்திக்கு சுயம்வரம் நடக்கிறது; அங்கு எல்லா நாட்டு மன்னர்களும் வந்திருக்கிறார்கள்; இந்திரனும் வந்திருக்கிறான்; ஆனால், தமயந்தி, நளன் எங்கிருக்கிறான் என்று கண்டு, அவனுக்கே மலை இட்டு மணந்து கொள்கிறாள்;
ஆனால் விதி வலியது;
கலி புருஷனுக்கு இவர்களின் சந்தோஷ வாழ்க்கை பொறாமையை உண்டு பண்ணியதாம்; எனவே, கலி, வேறு ஒரு மன்னனான புஷ்கரன் என்னும் மன்னனை ஏவி விடுகிறான்; நளனுடன் நீ சூதாடு; அவனை உன்னால் வெல்ல முடியும்; அதற்குறிய உதவியை நான் செய்கிறேன் என்று கலி கூறி தைரியம் ஊட்டியது; அவனும் நளன் மன்னருடன் சூது விளையாடுகிறான்; அந்தச் சூதில் நளன் தோற்றுவிடுகிறான்; நளன், தன் மொத்த நாட்டையும் சூதில் இழக்கிறான்; அவனும் அவன் மனைவி தமயந்தியும் உடுத்திய ஆடையுடன் காட்டுக்குப் போகிறான்; கல்லும் முள்ளும், வெயிலும் வருத்த வாழ்கிறார்கள்; அவள் படும் துன்பத்தை பொறுக்க முடியாமல், இவளை விட்டு விலகி விட்டால், அவள் தன் பெற்றோர் வீட்டுக்கு சென்று வாழலாமே என்று எண்ணுகிறான்; நான் மட்டுமே காட்டில் வாழ வேண்டும்; இவள் ஏன் இந்தத் துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என நினைத்து, ஒருநாள் இரவில் அவளை விட்டுச் சென்று விடுகிறான்;
அவள் எழுந்து பார்க்கிறாள்; கணவரைக் காணவில்லை; எங்கு தேடியும் பார்க்க முடியவில்லை; ஒருவழியாக, அவள் தன் பெற்றோர் வீட்டுக்கு வந்து சேர்ந்து விடுகிறாள்;
பின்னர், நளன், தன் ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்றான்;
இந்தக் கதையை விரித்துச் சொல்லும் நூல் தான் "நைஷதம்".
இதை தமிழில் இதே பெயரில் சொல்லி உள்ளனர்.


No comments:

Post a Comment