Tuesday, June 28, 2016

பத்தினி சாபம்!

பத்தினி சாபம்!
கௌசிகன் என்பவன் பெண் பித்தன் போல! இதனால் இவனுக்கு குஷ்ட நோய் வந்துவிட்டது; அப்போதும் அவன் மனைவி அவனுக்கு உரிய பணிவிடைகளைச் செய்து வந்து அவனுடனேயே வசித்து வருகிறாள்; கௌசிகனுக்கு ஒரு அழகிய வேசி மீது காமம் வந்தது; அதைத் தன் மனைவியிடமே கூறுகிறான்; அவளும், தன் கணவனின் ஆசையை நிறைவேற்ற நினைத்து, குஷ்ட நோயுடன், நீர்வடியும் உடம்புடன் இருக்கும் தன் கணவனை, தன் முதுகில் சுமந்து கொண்டு, அர்த்த ராத்திரியில் அந்த வேசி வீட்டுக்கு புறப்படுகிறாள்

வழியில் காட்டுப் பாதை; ஒரே இருட்டு; அந்தகாரம் என்னும் அளவுக்கு இருட்டு; கண் தெரியாத வழிபாதை; அந்த காட்டு வழியில்தான் மாண்டவியர் முனிவர் தவம் செய்து கொண்டிருக்கிறார்; இருட்டில் தெரியவில்லை; இவள் முதுகில் தூக்கிச் செல்லும் இவள் கணவனின் காலானது அந்த முனிவரின் தலையில் தட்டிவிடுகிறது; முனிவருக்குக் கோபம்; இந்த இரவில் எவன் தன்னை தலையில் உதைப்பது என்று தெரியும் முன்னரே சாபத்தை அள்ளி விடுகறார்; என் தலையை எவன் இடித்தானோ அவன் இன்று விடிவதற்குள் இறக்கக் கடவது! இடித்தவன் கேட்கட்டும் என சத்தமாகச் சொல்கிறார்;

இதை அவளும் கேட்கிறாள்; கணவனும் கேட்கிறான்; கணவனுக்கு பயம்! மனைவியோ, "என் பத்தினித் தன்மை உண்மையானால், நான் பதிவிரதையானால், இந்த இரவு விடியாமலேயே போகட்டும்" என்று மறு சாபம் இடுகிறாள்; பத்தினியின் சாபம் பொல்லததுதான்! முனிவர் சாபத்தையும் தாண்டி வீரியம் மிக்கது; பொழுது விடியவே இல்லை!

பொழுது விடியாத உலகத்தை எப்படி பார்ப்பது! எல்லோரும் விஷ்ணுவைத் தேடிப் போகிறார்கள்; விஷ்ணுவோ, "இதற்கு முடிவை அநசூயையிடம் கேளுங்கள் என்று அனுப்பி விடுகிறார்; அநுசூசை என்ற பெண், அத்திரி முனியின் மனைவி; மகா பத்தினி; எல்லோரும் அநசூசையிடம் போய் மண்டியிடுகிறார்கள்; அவள், கௌசிகன் என்னும் அந்த குஷ்டரோகியின் வீட்டுக்கே போகிறார்கள்; அங்கு அவன் மனைவி அநசூசை இருக்கிறாள்; அவன் மனைவியைச் சந்தித்து பாம விமோசனம் செய்து பொழுது புலரச் செய்ய வேண்டும் என கேட்கிறார்கள்; அவளோ மறுக்கிறாள்; பொழுது விடிந்தால், என் கணவர் இறந்துவிடுவாரே! என்கிறாள்; அவள் வீட்டுக்கு வந்தவர்களில் தேவர்களும் இருக்கிறார்கள்;

"அநசூசை என்னும் மகா பத்தினியே! மகளே!! கலங்காதே!!! உன் கணவர் இறக்க மாட்டார்; நாங்கள் உறுதி அளிக்கிறோம்; அவனுக்கு உள்ள இந்த குஷ்டநோய் நீங்கி, மிகவும் அழகானவனாக உன் கணவன் மறுபடியும் தோன்றுவான்" என்று உறுதி அளிக்கிறார்கள்;

அதை ஒப்புக் கொண்ட அவளும் பொழுது புலர அனுமதி அளிக்கிறாள்; பொழுது புலர்ந்து சூரியனும் வெளி வருகிறான்!

பழைய உருவத்தில் இருந்த கணவனும் இறந்து, மறைந்து புதிய அழகுள்ள கணவனாக காட்சி அளிக்கிறான்;



No comments:

Post a Comment