நாராயணன்
விஷ்ணு; நாரம் என்றால் ஜலம் (நீர்) என்று பொருள்; நீரில் பிறந்ததால்
நாராயணன் எனப் பெயர்; மகா பிரளயத்தில் எல்லாமே அப்பு ரூபமாய் ஒடுங்கியதாம்; அப்பு
= நீர்; அப்போது அதில் விஷ்ணு தோன்றி உலகம் அனைத்தையும் தோற்றுவித்தார் என்று
வேதபுராணங்கள் சொல்கின்றன;
நாராயணன் என்ற வார்த்தையை விஷ்ணுவுக்கு மாத்திரமல்ல, சிவனுக்கும்
சொல்வார்களாம்!
இந்த ஜகம் என்னும் பிரபஞ்ச உலகம் அப்புவில் ஒடுங்கிய காலத்திலே அதை
மீண்டும் அதை பிரபஞ்சமாக தோற்றுவித்த பரப்பிரமத்தின் புருஷ அம்சமே நாராயணன் என்று
சொல்கிறார்கள்; நாராயணன் என்பது அப்புவின் (நீரின்) மூலப்பகுதி; அது
மண்டலத்திலிருந்து எழுந்து ஆடும் சர்ப்ப வடிவினை உடையதாய் இருக்கும்; அதன் சக்தி
பாகம் சங்கின் வடிவமாய் இருக்கும்; அப்புவிடம் விளங்கும் புருஷ அம்சம் ஆதிசேஷன் என்னும்
சர்ப்பத்தை படுக்கையாகக் கொண்டு அதில் துயில் செய்யும் நாராயணன் என்று கூறப்படும்;
ஒடுங்காது எஞ்சி நின்று, மீளவும் சகத்துக்கு ஆதி காரணமாக கிடந்தது அப்புவின்
மூலப்ப்பகுதியான இது என்பதால் இதை ஆதிசேஷன் என்பர்; சேஷம் = எஞ்சியது; அப்புவின்
மூலப்பகுதி மண்டலமிட்டு எழுந்து ஆடும் சர்ப்ப வடிவு என்பது அப்புவின் அணுவை
எடுத்துச் சோதித்தால் இது புலனாகும் என்கிறார்கள்; அந்த அணுவானது ஸ்தூல நிலை
விட்டு சூக்குமித்து சூக்குமித்துப் போய் ஏழாவது நிலையை அடையும் நேரத்தில் இந்த
நிலையைப் பெறுமாம்; அதற்கு கீழே உள்ள ஆறாவது நிலையில் கமலவடிவம் பெறும்; கமல
வடிவுடைய அப்புவிடம் பிரமாவாகிய சிருஷ்டி புருஷன் தோன்றுவான்; அப்புவின்
மூலப்பகுதியை ஆதிசேஷன் என்றும், அப்புவுக்கு குறி கமலம் என்றும் கூறியது நமது
பூர்வ வேதாந்த சித்தாந்த நூல் ஆசிரியர்கள் பூத பௌதீக ஞானமும், நுண்மையும் அநுபவமும்
பெரிதும் பாராட்டத்தக்கது என்று இக்கால ஐரோப்பிய விஞ்ஞானிகள் ஒப்புக்
கொண்டுள்ளனர்;
*
No comments:
Post a Comment