நவராத்திரி
இந்த நவராத்திரி பூஜைகளைச் செய்தால், ஒருவர் தான் இழந்த
செல்வத்தை மீண்டும் பெறலாமாம்.
இந்த நவராத்திரி, ஆஸ்வயுஜ மாதத்தில் (ஐப்பசி
மாதத்தில்) சுக்கில பிரதமை முதல் ஒன்பது ராத்திரிகள்தான் நவராத்திரி ஆகும்.
கிருத யுகத்தில் ஒரு அரசன் இருந்தான்; அவன் பெயர் சுகேதன்;
அவன் தன் இராஜ்ஜியத்தை இழந்தான்; மனைவியை
கூட்டிக் கொண்டு காட்டுக்குப் போகும்படி ஆகி விட்டது; காட்டில்
வாழ்கிறான்;
அந்தக் காட்டில், ஒரு முனிவர் இருக்கிறார்;
அவர் பெயர் ஆங்கிரசன்; அவரை, இந்த மன்னன் சென்று பார்க்கிறான்; அந்த ரிஷி,
இந்த மன்னனுக்கு, ஒரு பூஜைமுறையைச் சொல்லிக்
கொடுக்கிறார்; அதைச் செய்தால், நீ
இழந்தவற்றை எல்லாம் திரும்பப் பெறலாம் என்றும் சொல்கிறார்;
அதுவே நவராத்திரி பூஜை; அதை செய்துவருகிறான்;
இழந்த நாடு நகரங்களை எல்லாம் திரும்பப் பெற்றான்;
நாட்டுக்கு வந்தபின்னரும் அந்த பூஜையைத்
தொடர்ந்து செய்து வந்தான்; அது முதல், எல்லோரும் இந்த பூஜையைச் செய்ய
ஆரம்பித்தனராம்;
துர்க்கை, லக்ஷூமி, சரஸ்வதி இம்மூவரையும்
முறையே ஒவ்வொருவருக்கும் மூன்று நாட்கள் வீதம் ஒன்பது நாட்கள் பூசித்து வர
வேண்டுமாம்; ஒன்பாதம் நாள் ஆயுதங்களையும் புத்தகங்களையும்
வைத்து ஆராதித்து வருவர்;
மறுநாள் பத்தாம் நாளே தசமி திதி; இதையே விஜய தசமி என்பர்;
வெற்றி கிடைக்கும் நாள்!
No comments:
Post a Comment