"முடிவிலின்பத்து மூவாமுதல்வனைப் போற்றிசெய்தே
அடிதொறுமிரண்டுமொன்று மாதியிற்பொருளடக்கி
நடைபெறுக்கரமாதினகரவீறெதுகையாகப்
படியிரோர் சொற்பொருட்பல்விதத் தொகைபகரலுற்றாம்."
முடிவு இல் இன்பத்து = முடிவு இல்லாத அளவில்லா இன்பத்தை உடைய;
மூவா முதல்வனைப் போற்றி செய்து = மூத்த முதல்வனான அருகக்கடவுளைப் போற்றித் துதித்து;
அடிதொறும் இரண்டும் ஒன்றும் = பாடலின் அடிகள் தோறும் இரண்டு சொல்லினும், ஒரு சொல்லினும்;
ஆதியிற் பொருள்கள் அடக்கி = முதலில் அதன் பொருள்களை அமைத்து;
நடைபெறு ககரபம் ஆதி னகரம் ஈறு எதுகையாக = நடைபெற்றுவரும் ககர எதுகை முதல் னகர எதுகை வரை;
கடியில் ஓர் சொற் பல் விதப் பொருள் தொகை ஓர் சொல் பலவிதப் பொருள்கள் என;
பகரலுற்றாம் = சொல்லல் உற்றாம்;
No comments:
Post a Comment