Tuesday, July 19, 2016

அபிராமி அந்தாதி (காப்புப் பாடல்)

அபிராமி அந்தாதி (காப்புப் பாடல்)
(அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி)
காப்பு
தாரமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும், தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே! உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே.
தெளிவுரை:
கொன்றை மாலையையும் சண்பக மாலையையும் அணிந்து தில்லையம்பதியாம் சிதம்பரத்தின் நாயகர் நடராசருக்கும் அவரது ஒரு பாதியாக இடப்பாகத்தில் எப்பொழுதும் வீற்றிருக்கும் உமையவளுக்கும் உதித்த மைந்தனே! மேகம் போன்ற கருநிறமுடைய கணபதியே! ஏழு உலகங்களையும் பெற்ற சிறந்த அபிராமித் தாயின் அருளையும் அழகையும் எடுத்துக் கூறி அணிவிக்கும் இந்த அந்தாதி மாலையானது எப்பொழுதும் என் சிந்தையுள்ளே இருக்கும்படி அருள் புரிவாயாக!

(தார்=பூமாலை;
கார்=மேகம்;
சீர்=சிறந்த)
(நன்றி; திரு. வே.ராமசாமி அவர்களின் புத்தகமான "அபிராமி அந்தாதி தெளிவுரை" என்ற நூலிலிருந்து)

No comments:

Post a Comment