அன்னை அபிராமி
ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் வழிகாட்டி அன்னை அபிராமி ஆவாள்; ராமி என்றால் அழகுடையவள்; அபிராமி என்றால் பேரழகு உடையவள்; பிரணவத்தில் உகரம் என்ற எழுத்து அபிராமிக்கு உரியது; அந்த எழுத்தைக் கொண்டு அபிராமி பட்டர் “உதிக்கின்ற” என்று தொடங்கி, “உதிக்கின்றவே” என்று 100வது பாடலில் பூர்த்தி செய்கிறார்; அபிராமியை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் எப்பொழுதும் உதயமே என்று சொல்கிறார்;
அம்மனின் திருவடித் தாமரைகளைப் போற்றி வணங்கினால் எந்தவிதமான தீங்கும் நேராது என அபிராமி பட்டர் கூற்று; அதற்காக அபிராமி அந்தாதி பாடல்களில் மூன்றில் ஒரு பங்கு பாடல்களான 33 பாடல்களில் அம்மனின் தாமரை போன்ற திருவடிகளைப் போற்றிப் பாடியுள்ளார்;
அம்பிகையின் பக்தரான மன்மதனை, சிவபெருமான் தன்னுடைய நெற்றிக்கண்ணால் எரித்த பொழுது அவனிடம் உள்ள கரும்பு வில்லையும் மலர்க்கணைகளையும் அம்பிகைக்கு காணிக்கையாக கொடுத்தான்; அதையும் அபிராமி பட்டர் தனது அபிராமி அந்தாதியில் 13 பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்;
சிவனின் இடப்பாகத்தில் அபிராமி அமர்ந்த பெருமையைப் போற்றி 15 பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்;
(நன்றி: திரு. வே.ராமசாமி அவர்களின் புத்தகமான “அபிராமி அந்தாதி தெளிவுரை” என்ற நூலிலிருந்து)
** ** **
No comments:
Post a Comment