அபிராமி அந்தாதி 3-ம் பாடல்
(அபிராமி பட்டர்
அருளிய அபிராமி அந்தாதி)
(பாவம் போக்க)
அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்து
கொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே!
வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத
கரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய
மனிதரையே.
தெளிவுரை
திருமகளாய் விளங்கும்
அபிராமியே, வேறு எவரும் படித்துப் பொருள் தெரிந்து
கொள்ள முடியாத வேதத்தின் உட்பொருளை, அதன் சாரத்தை நான்
அறிந்து கொண்டேன்; அவ்வாறு அறிந்தமையால்
உனது திருவடியில் இரண்டறக் கலந்து விட்டேன்; உனது பெருமையை
உணர்ந்தும் அடியவர்களின் கூட்டுறவை நான் நாடியதில்லை; மனதாலும் அவர்களை எண்ணாத காரணத்தால்
தீவினை மிக்க என் நெஞ்சானது நரகத்தில் வீழ்ந்து கொண்டிருக்கும் மனிதரையே நாடிக்
கொண்டிருந்தது; இப்போது அதை நான் தெரிந்து கொண்டு
விட்டேன்; அதனால் தீயவழியில் செல்லும் மனிதரை
விட்டுப் பிரிந்து விட்டேன்; இனி தாயே நீயே
எனக்குத் துணை.
(மறை=வேதம்).
(நன்றி: திரு
வே.ராமசாமி அவர்களின் புத்தகமான “அபிராமி அந்தாதி
தெளிவுரை” என்ற நூலிலிருந்து).
No comments:
Post a Comment