அத்தி தல முருகன்
பிள்ளைத்தமிழ்-3
(முருகன் திரு
அவதாரம்)
ஆர்த்தெழும் அச் சூர்
முதலால் அலக்கண் உற்ற தேவர் எலாம்
அகமகிழச் சிவன்
விழியால் ஆறுசுடர் அருள
அனலனொடு மருத்தினனும்
அவை தாங்கி ஆற்றாதே
அருங் கங்கையிடம்
சேர்க்க அன்னாளும் மாழ்கித்
தீர்த்தி கையாம்
சரவணத்தில் செல உய்க்க அவைகளெலாம்
திரண்டு ஒன்றாய்ச்
செழுமலரில் சிறு குழவியாகித்
திரளமுது
கார்த்திகையாரிடம் உண்டு விளையாடித்
திரிகின்ற காலத்தே
நம் மகனை இன்றே
பார்த்தருள வேண்டும்
எனப் பரமனுடன் வந்தவளே
பால் சுரக்க
அனைத்தவனைச் சிரமோந்த தாயே
பரல்கள் உறு நலவீரர்
தோன்றுதற்குத் துணையாகிப்
பல் உயிரும் கரு
உயிர்த்த பைங்கொடியே காக்க
சீர்த்தி மிகு
பெருமக்கள் வளர்கைதை நகரத்தில்
திகழ்கின்ற் அத்தி
தலத் திருக் கோயில் ஏற்றுச்
செழுஞ்சுடரோன்
உதயகிரி வரும்பரிசாய் மயிலின்மேல்
இவர்ந்து வரும்
ஆறுமுக இளையோனை அம்மா!.
சூர் முதல் = சூரபத்மன் முதல்;
அலக்கண் = துன்பம்;
அனலன் ==
அக்கினிதேவன்;
மருத்தினன் = வாயு
பகவான்;
மாழ்கி = மயங்கி;
சிரிமோந்த = உச்சி
மோந்த;
பரல்கள் = சிலம்பின்
உள்ளே உள்ள கற்கள்;
இவர்ந்து = ஏறி
நடத்தி;
No comments:
Post a Comment