திருவாசகம்:
முன்னின்று ஆண்டாய் எனும் முன்னம்
யானும் அதுவே முயல்வுற்றுப்
பின் நின்று ஏவல் செய்கின்றேன்
பிற்பட்டொழிந்தேன் பெம்மானே
என்னின்றருளி வரநின்று போந்திடு
என்னாவிடில் அடியார்
உன்னின்று இவனார் என்னாரோ
பொன்னம்பலக்கூத்து உகந்தானே!
**
என் முன்னர் தோன்றி, நீயே என்னை ஆட்கொண்டாய்! அதன்படி உன்னையே பின்பற்றி உனக்கு ஏவல் செய்கின்றேன்! அதில் என்னையே இழந்து விட்டேன்! நீ, என் முன் நின்று அருளி, ‘என்னிடம் வா’ என்று நீ அழைக்காவிட்டால், உன் அடியவர்கள் ‘இவன் யார்’ என்று கேட்டு என்னை ஒதுக்கி விட மாட்டார்களா, பொன்னம்பலத்தில் கூத்தாடிய பெருமானே!
**
No comments:
Post a Comment