அபிராமி அந்தாதி 2-ம் பாடல்
(அபிராமி பட்டர்
அருளிய அபிராமி அந்தாதி)
(தெய்வத் துணை கிடைக்க)
துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும்
சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்டவேரும்
பனிமலர்ப்பூங்
கணையும் கருப்புச் சிலையும்மென்
பாசங்குசமும் கையில்
அணையுந் திரிபுரசுந்தரி யாவது
அறிந்தனமே.
தெளிவுரை
எனக்குத் துணையாகவும், தொழுகின்ற தெய்வமாகவும், பெற்ற தாயாகவும், விளங்குகின்ற அபிராமி அன்னையை, நான் ‘துணை’ என்று அறிந்து
கொண்டேன்; வேதங்களில் தொழிலாகவும் அவற்றின்
கிளைகளாகவும், வேராகவும், வேதங்களில் சாகை, உபநிஷதம், பிரணவம் ஆகிய எல்லா நிலைகளிலும் நிலைபெற்று அபிராமி இருக்கிறாள்; அவளது நான்கு கைகளிலும் குளிர்ந்த மலர்
அம்புகள் ஐந்தும், கரும்புவில்லும், மெல்லிய பாசமும், அங்குசமும் கைகளில் கொண்டு விளங்குகின்ற
அந்தத் திரிபுரசுந்தரியாகிய அபிராமவல்லியே எனக்கு என்றும் துணையாவாள்.
(சுருதி=வேதம்; பணை=பொருள்).
(நன்றி: திரு. வே.ராமசாமி அவர்களின்
புத்தகமான “அபிராமி அந்தாதி தெளிவுரை” என்ற நூலிலிருந்து)
No comments:
Post a Comment