திருவிளையாடல்-22
அபிஷேக பாண்டிய மன்னர் இறந்து விட்டார்; அவரின் மகன் விக்கிரம பாண்டியன் முடிசூடி மதுரையை ஆண்டு வருகிறார்; அந்தக்
காலக் கட்டத்தில், சோழமன்னர் சமண
சமயத்தில் மாறி அந்த மதத்தை பின்பற்றி வருகிறார்; அவருக்கு பாண்டிய மன்னர் மீது
வெறுப்பு;
எனவே, எட்டு மலைகளான, அஞ்சனம், கிரவுஞ்சம், கோவர்த்தனம், திரிகூடம், காஞ்சி,
அத்திகிரி, எமகூடம், விந்தம் என்று எட்டு மலைகளில் வாழும் சமண முனிவர்களை
வரவழைக்கிறார் சோழ மன்னர்;
அந்த எட்டு மலைகளில் வசித்து வந்த எண்ணாயிரம் சமண முனிவர்கள் வந்துவிட்டார்கள்;
அவர்களைக் கொண்டு ஒரு பெரிய யாகம் நடத்துகிறார் சோழமன்னர்; அந்த யாகத்தில் ஒரு பெரிய யானையை
வரவழைக்கின்றனர்; இது மிகப் பெரிய பலம் பொருந்தியதாக இருக்கிறது; அந்த யானையை
யாராலும் வெல்ல முடியாது;
அந்த யானை எவி விடுகிறார் சோழ மன்னர்; “நீ போய், பாண்டிய மன்னரைக் கொல்ல
வேண்டும்” என்று ஆணையிடுகிறார்; அந்த யானை யாகத்தில் உருவான யானை;
இதை, பாண்டிய மன்னர் அறிந்து கொள்கிறார்; அந்த யானை வந்தால் தன்னைக் கொன்றுவிடும்
என்று தெரியும்; உடனே, சிவனான சோமசுந்தர பாண்டியனை வேண்டுகிறான் பாண்டிய மன்னர்:
சிவன், ஒரு வேடுவன் வடிவம் எடுத்து அங்கு வருகிறார்; அந்த யானையை நேரில்
சந்திக்கிறார்; அதைத் தன் கையாலேயே கொன்று விடுகிறார்; அதனால் பாண்டிய மன்னர்
காப்பாற்றப் படுகிறார்;
இப்படியாக, சிவன் நடத்திய விளையாடல் 22-ம் திருவிளையாடல்.