Showing posts with label சுப்பிரமணியக் கடவுள். Show all posts
Showing posts with label சுப்பிரமணியக் கடவுள். Show all posts

Sunday, January 11, 2015

கண்டு கொண்டேன்...

அடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு
வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையிற்
றடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே.
(அருணகிரிநாதரின் கந்தரலங்காரம்)

அடல் = வலிமை;
அருணை = திருவண்ணாமலை;
வாயிலுக்கு வடவருகில் = வாசலின் வடக்கு அருகில்;
சென்று கண்டுகொண்டேன் = தரிசித்தேன்;
வருவார் தலையில் = வருபவர் அவரவர் தலைமீது;
தடபட டெனப்படு = தடதடவென்று;
குட்டுடன் = தலையில் குட்டிக் கொள்ளும்;
சர்க்கரை மொக்கிய கை = குட்டிக்கொண்டபின், அமுது உண்ணும் கையுடன்;
கடதட கும்ப களிற்றுக்கு = மதம்பிடித்து திரியும் யானை கடவுளுக்கு;
இளைய களிற்றினை = இளைய யானையான தம்பி யானையான சுப்பிரமணிய கடவுளை;


(முருகனைப் பாடிய கந்தரலங்காரத்தில் விநாயகரை கடவுள் வாழ்த்தில் பாடவேண்டும் என்பதால், அவரைப் பாடிய அதேபாட்டிலிலேயே விநாயகரின் தம்பி சுப்பிரமணியக் கடவுளையும் பாடி, இருவருக்கும் ஒரே கடவுள் வாழ்த்தாக பாடிய அருணகிரிநாதர்).

Saturday, January 10, 2015

ஏறுமயிலேறி விளையாடு முகமொன்றே!

ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
கூறுமடி யார்கள்விணை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
மாறுபடி சூரரைவ தைத்தமுக மொன்றே
வள்ளியை மணப்புணர வந்தமுக மொன்றே
ஆறுமகு மானபொரு ணீயருளல் வேண்டும்
ஆதி யருணாசல மமர்ந்த பெருமாளே.


(அருணகிரிநாதர், திருவண்ணாமலையில் சுப்பிரமணிய கடவுளைத் துதித்து முதன் முதலில் பாடியது. இவர்தான் தன் ஆன்மாவை தனது உடலைவிட்டு நீக்கி, ஒரு கிளியின் உடலில் புகுந்து, திருச்செந்தூர் சென்று சுப்பிரமணிய கடவுளை வழிபட்டு திரும்பியபோது, தன் உடலைக்காணது, கிளி உடலிலேயே இருந்தவர்.)