அடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு
வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையிற்
றடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே.
(அருணகிரிநாதரின் கந்தரலங்காரம்)
அருணை = திருவண்ணாமலை;
வாயிலுக்கு வடவருகில் = வாசலின் வடக்கு அருகில்;
சென்று கண்டுகொண்டேன் = தரிசித்தேன்;
வருவார் தலையில் = வருபவர் அவரவர் தலைமீது;
தடபட டெனப்படு = தடதடவென்று;
குட்டுடன் = தலையில் குட்டிக் கொள்ளும்;
சர்க்கரை மொக்கிய கை = குட்டிக்கொண்டபின், அமுது உண்ணும்
கையுடன்;
இளைய களிற்றினை = இளைய யானையான தம்பி யானையான சுப்பிரமணிய கடவுளை;
(முருகனைப் பாடிய கந்தரலங்காரத்தில் விநாயகரை கடவுள்
வாழ்த்தில் பாடவேண்டும் என்பதால், அவரைப் பாடிய அதேபாட்டிலிலேயே விநாயகரின் தம்பி சுப்பிரமணியக்
கடவுளையும் பாடி, இருவருக்கும் ஒரே கடவுள் வாழ்த்தாக பாடிய அருணகிரிநாதர்).
No comments:
Post a Comment