ஒருவரைப் பங்கி லுடையாள் குமார னுடைமணிசேர்
திருவரைக் கிண்கிணி யோசை படத்திடுக் கிட்டரக்கர்
வெருவரத் திக்குச் செவிடுபட் எட்டுவெற் புங்கனகப்
பருவரைக் குன்று மதிர்ந்தன தேவர் பயங்கெட்டதே.
(அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரம்)
ஒருவரைப் பங்கில் உடையாள் குமாரனுடைய (ஒப்பில்லாத அந்த
ஒருவனான சிவனின் பாகத்திலுள்ள உமாதேவியின் குமாரரான), மணிசேர் திரு அரைக்
கிண்கிணி ஓசைபட (இரத்தினம் பொருந்திய இடுப்பில் சதங்கை ஒலி கேட்க), திடுக்கிட்டு அரக்கர், வெருவர (பயப்பட), திக்கு செவிடு பட (எல்லாத் திசைகளும் செவிடுபட),
எட்டு
வெற்பும், (எட்டு மலைகளும்), கனகப்
பருவரைக் குன்றும் (பொன்னால் ஆன பெரிய மலையான மேருவின் சிகரமும்), அதிர்ந்தன, தேவர் பயங்கெட்டது (தேவர்களின் பயம்
நீங்கியது).
(சுப்பிரமணியக் கடவுளின் சதங்கை ஒலி கேட்டதால் இந்த
நிகழ்வுகள்) .
No comments:
Post a Comment