தேனென்று பாகென்று வமிக்கொ ணாமொழித் தெய்வவள்ளி
கோனன் றெனக்குப தேசித்த தொன்றுண்டு கூறவற்றோ
வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
தானன்று நானன் றசரீரியன்று சரீரியன்றே.
(அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரம்)
தேன் என்றும்,
பாகு என்றும், உவமிக்க ஒண்ணாத
(உவமை சொல்ல முடியாத), மொழித் தெய்வவள்ளி கோன், (முருகக்கடவுள்), என்றனுக்கு (எனக்கு), உபதேசித்தது ஒன்று உண்டு, கூறவற்றோ, வான் அன்று, கால் அன்று (காற்று அன்று), தீ அன்று, நெருப்புமன்று, நீர்
அன்று, மண்ணும் அன்று, தான் அன்று,
நான் அன்று, அசரீரி அன்று (சரீரம் இல்லாததும் அன்று),
சரீரி அன்று (உடல் உள்ளதும் அன்று).
(உவமையாகச் சொல்லத் தெரியவில்லை).
No comments:
Post a Comment