Monday, January 12, 2015

அசைபடு கால் பட்டு அசைந்தது மேரு

குசைநெகி ழாவெற்றி வேலோ னவுணர் குடர்குழம்பக்
கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின்கொத்
தசைபடு கால்பட் டசைந்தது மேரு வடியிடவெண்
டிசைவரை தூள்பட்ட வத்தூளின் வாரி திடர்பட்டதே.
(அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரம்)

குசை நெகிழா (கூர்மை குறையாத), வெற்றி வேலோன், அவுணர் (அசுரர்), குடர்குழம்ப (குடல் கலங்கும்படி), கசையிடு (கயிற்றால் வேகப் படுத்தப்-படும்)வாசி (குதிரை), விசைகொண்ட வாகன வேகமாகச் செல்லும் வாகனமான), பீலியின் கொத்து (மயிலின் தோகை), அசைபடு, கால்பட்டு (காற்றுப் பட்டு), அசைந்தது மேரு (மேரு மலையே அசைந்தது), அடியிட (மயிலின் கால் பட), எண்திசை வரை தூள்பட்ட (எட்டு திக்கும் தூள் பறந்தது), அத் தூளின், வாரி (கடல்), திடர்பட்டது (தீவுத்திடர் போலானது).

No comments:

Post a Comment