Monday, January 12, 2015

எல்லாம் இழந்து சும்மா இருக்கும் எல்லை...

சொல்லுகைக் கில்லையென் றெல்லா மிழந்து சும்மாவிருக்கு
மெல்லையுட் செல்ல வெனைவிட்ட வாவிகல் வேலனல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச் செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோளண்ணல் வல்லபமே.
(அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரம்)

சொல்லுகைக்கு இல்லை என்று (சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை என்று), எல்லாம் இழந்து, சும்மா இருக்கும், எல்லையுள் செல்ல (அந்த எல்லைக்குள் செல்ல), எனை விட்டவா, இகல் வேலன்நல்ல கொல்லியை (நல்ல பண் இசையை), சேர்க்கின்ற சொல்லியை (சொல்லை),   கல்வரைக் கொவ்வைச் செவ்வாய் (கன்மலையில் இருக்கும் கொவ்வைக் கனி பொன்ற சிவந்த வாயுடையவளை), புல்கின்ற (புணருகின்ற), மால்வரைத் தோள் அண்ணல் (மலைபோன்ற தோள்களையுடைய பெருமானான முருகக் கடவுள்), வல்லபமே (வல்லமையே).

No comments:

Post a Comment