Wednesday, January 14, 2015

தடுக்கோண் மனத்தை...

தடுக்கோண் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானமென்று
மிடுங்கோ ளிருந்த படியிருங் கோளெழு பாருமுய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றத் திறக்கத் துளைக்கவைவேல்
விடுங்கோ னருள்வந்து தானே யுமக்கு வெளிப்படுமே.
(அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரம்).

தடுக்கோண் மனத்தை (தடுக்கமுடியாத தடுமாற்ற மனத்தை தடுங்கள்), விடுங்கோள் வெகுளியை (கோபத்தை விடுங்கள்)
தானம் என்றும் இடுங்கோள், இருந்தபடி இருங்கோள் (உண்மை வழியில் இருங்கள்), எழுபாரும் உய்ய (ஏழு உலகமும் உய்ய), கொடுங்கோபச் சூருடன் குன்றந் திறக்கத் துளைக்க (சூரன் மலையையே துளைக்க), வைவேல் (கூரிய வேல்), விடுங்கோன் (விட்ட வீரனே), அருள்வந்து தானே உமக்கு வெளிப்படுமே.

No comments:

Post a Comment