Thursday, January 15, 2015

வையிற் கதிர் வடிவேலன்...

வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்று
நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணும் கடைவழிக்கே.
(அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரம்)

வையிற் கதிர் வடிவேலோனை (கூர்மையான கதிர் வீச்சுள்ள வடிவேலோனை), வாழ்த்தி, வறிஞர்க்கென்று (வறியவர்களுக்கு என்றும்), நொய்யிற் பிளவள வேணும் (நொய் அரிசியிலும் நொய்யான ஒரு சிறு பகுதியை), பகிர்மின் (பகிர்ந்து கொடுங்கள்), நுட்கட்கு இங்கன், வெய்யிற்கு ஒதுங்க (வெயிலுக்கு ஒதுங்குவதற்குகூட), உதவா உடம்பின் (உதவாத உடம்பை), வெறு நிழல் போல (வீணான நிழலைப் போல), கையிற் பொருளும், காணும் கடைவழிக்கு உதவாது (கடைசி காலத்திற்கு உதவாது).

No comments:

Post a Comment