ஒளியில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மே
லளியில் விளைந்ததொ ரானந்தத் தேனை யநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்
தெளிய விளம்பிய வாமுக மாறுடைத் தேசிகனே.
(அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரம்)
ஒளியில் விளைந்த, உயர் ஞானபூதரத்து
(ஞான மலையின்), உச்சியின்மேல், அளியில்
(அருளில்), விளைந்தது, ஓர் ஆனந்த தேனை,
அநாதியிலே (இறைநிலையில்), வெளியில் விளைந்த, வெறும்பாழை பெற்ற வெறுந்தனியை (பிரணவத்தை),
தெளிய விளம்பினவா (தெளிவாகச் சொன்னவரே), முகம்
ஆறுடைத் தேசிகனே.
No comments:
Post a Comment