மரணப் ரமாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணைகிரணக் கலாபியும் வேலுமுண் டேகிண் கிணிமுகுளசரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷாபரணக்ரு பாகர ஞானா கரசுர பாஸ்கரனே.(அருணகிரநாதரின் கந்தரலங்காரம்)
*
மரணப் பிரமாதம் நமக்கு இல்லையாம்;
(மரணம் என்னும் பெரும்நிகழ்வு நமக்கு வருவதில்லை);
என்றும் வாய்த்த துணை கிரணக் கலாபியும் வேலும் உண்டே;
(நமக்கு எக்காலமும் வாய்ப்பான, (கிரண) கதிர்வீசும் தோகையும்
வேலும் உண்டு);
கிண்கிணி முகுள சரணப் பிரதாப;
(கிண்கிணி என்னும் சதங்கை அணிந்த பாதங்களை உடைய பிரதாபரே);
சசிதேவி மங்கல்ய தந்து ரக்ஷா பரண கிருபாகர;
(இந்திராணியின் மாங்கல்யத்தை காக்கும் கிருபாகரரே);
ஞானாகர சுர பாஸ்கர;
(ஞானத்தின் இருப்பிடமான, தேவ சேனாதிபதியே);
No comments:
Post a Comment