Sunday, January 25, 2015

உமையாள் பயந்த இலஞ்சியமே!

மொய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணப்போற்கைதா னிருப துடையான் றலைபத்துங் கத்தரிக்கவெய்தான் மருக னுமையாள் பயந்த விலஞ்சியமே.(அருணகிரிநாதரின் கந்தரலங்காரம்)

*
மொய் தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன்;
(நெருக்கமான பூமாலையை கொண்டு அலங்கரித்த கூந்தலையுடைய வள்ளியை மணம் புரிந்தவரே);

முத்தமிழால் வைதாரையும் இங்கு வாழ வைப்போன்;
(இயல் இசை நாடகம் என்ற மூன்று தமிழிலாலும் தம்மைத் திட்டியவரையும் வாழ வைப்பவனே);

வெய்ய வாரணம்போல் கைதான் இருபது உடையான்  தலை பத்தும் கத்தரிக்க எய்தான் மருக;
(கொடிய யானையைப் போல, கைகள் இருபதும், தலை பத்தும் உடைய ராவணனின் தலையைக் கொய்த விஷ்ணுவின் மருமகனே);

உமையாள் பயந்த இலஞ்சியமே;
(உமை என்னும் உமா தேவி ஈன்றருளிய மகிழம்பூ போன்ற இனியவனே);

No comments:

Post a Comment