ஓரவொட் டாரொன்றை யுன்னவொட் டார்மல ரிட்டுனதாள்
சேரவொட் டாரைவர் செய்வதென் யான்சென்று தேவருய்யச்
சோரநிட் டூரனைச் சூரனைக் காருடல் சோரிகக்கக்
கூரகட் டாரியிட் ரிமைப் போதினிற் கொன்றவனே.
(அருணகிரிநாதரின் கந்தரலங்காரம்)
ஓர ஒட்டார் (ஒன்றை ஆராய்ந்து அறியமாட்டார்), ஒன்றை உன்ன ஒட்டார் (எண்ண
மாட்டார்), உனது தாள் சேர மாட்டார், ஐவர்
பகைவர் (ஐம்புலனும் பகை), செய்வது என் யான் (என்னால் என்ன செய்ய
முடியும்), சென்று, தேவர் உய்ய,
சோர நிட்டூரனைச் சூரனை (திருடனும், கொடியவனுமான
சூரனை), கார் உடல், சோரிக்க (இரத்தம் சொட்ட),
கூரகட்டாரி இட்டு, ஒர் இமை பொழுதினிலே கொன்றவனே.
No comments:
Post a Comment