Monday, January 12, 2015

சலதி கிழிந்து உடைபட்ட...

படைபட்ட வேலவன் பால்வந்தவாகைப் பதாகையென்னும்
தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச் சலதிகிழிந்
துடைபட்ட தண்ட கடாக முகிர்ந்த துடுப்படல
மிடைபட்ட குன்றமு மாமேரு வெற்பு மிடிபட்டவே.
(அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரம்)

படைபட்ட (படைகளை உடைய), வேலன் பால் வந்த (வேலனிடன் வந்த), வாகைப் பதாகை என்னும் (வெற்றிக் கொடியான)தடைபட்ட சேவல் (முருகனால் தடுத்து ஆட்கொள்ளப்பட்ட சேவல்), சிறகடிக் கொள்ள (சிறகை அடித்துக் கொண்டபோது), சலதி கிழிந்து (கடல் கிழிந்து), உடைபட்ட (பிரிந்து உடைந்தது), அண்டகடாகம் உதிர்ந்த (அண்டம் என்னும் குவிப்பு உதிர்ந்தது), உடுப்படலம் (இடையில் உள்ள படலமான நட்சத்திர கூட்டங்கள்), அடைபட்ட (இடிபட்டன), குன்றமும் மாமேரு வெற்பும் (குன்றுகளும், மலைகளும்), இடிபட்டவே. 


No comments:

Post a Comment