Showing posts with label பிரம்மா. Show all posts
Showing posts with label பிரம்மா. Show all posts

Tuesday, March 29, 2016

பிரஜாபதி

பிரஜாபதி என்பவர்கள் பிரம்மாவால் படைக்கப்பட்டவர்கள்; பிரம்மாவின் படைப்புத் தொழிலைச் செய்வதற்காக இவர்கள் படைக்கப்பட்டார்களாம்; மொத்தம் 10 பிரஜாபதிகள் உள்ளனர்; மரீசி, அத்திர, அங்கிரசர், புலஸ்தியர், புலகர், கிருது, வசிஷ்டர், தக்கன், பிருகு, நாரதர் ஆகியோர்; (மகாபாரதக் கதைப்படி மேலும் சிலரும் பிரஜாபதிகளே! அவர்கள், நாரதர், காசிபர், கௌதமர், பிரஹலாதர், கர்த்தமர் ஆகியோர்);

பிரம்மா:
மும்மூர்த்திகளில் இவரும் ஒருவர்; படைக்கும் தொழிலைச் செய்பவர்; (மும்மூர்த்திகளில் மற்ற இருவர், திருமால், சிவன்); பிரம்மாவின் மனைவி சரஸ்வதி; சரஸ்வதியை கலைமகள் என்பர்; பிரம்மாவும், சரஸ்வதியும் சத்ய லோகத்தில் வசிக்கின்றனர்; பிரம்மாவுக்கு நான்கு தலைகள், நான்கு கைகள்; இவர் அன்னப்பறவையில் அமர்ந்திருப்பார்; இவருக்கு நான்கு முகங்கள் இருப்பதால் "நான்முகன்" என்று கூறுகின்றனர்;

பிரம்மா, நான்கு யுகங்களான கிரேத யுகம், திரேதயுகம், துவாபர யுகம், கலியுகம் என மொத்தம் 43, 20,000 ஆண்டுகள் கொண்ட இரண்டாயிரம் நான்கு யுகங்கள் என்னும் சதுர்யுகங்கள் முடிந்தால், பிரம்மனின் ஆயுளும் முடியும்; திருப்பாற்கடலை கடைந்தபோது, அதிலிருந்து தோன்றிய சரஸ்வதியை மணந்து கொண்டார்; பிரம்மா, தன் மனோசக்தியால், பிரஜாபதிகளை படைத்துக் கொண்டார்; அவர்கள் மூலமே படைத்துத் தொழிலை தொடங்கினார்;

திருமாலுக்கும், பிரம்மாவுக்கும் யார் பெரியவர் என்று போட்டியாம்; அதனால் சிவனிடம் சென்று கேட்டுள்ளனர்; அவர் தன் முடியை பிரம்மாவைப் பார்த்து வர அனுப்பினார்; பிரம்மா தன் வாகனமான அன்னப் பறவையில் சிவனின் முடி தேடிச் சென்றார்; விஷ்ணுவை, சிவனின் பாதத்தைப் பார்த்து வர அனுப்பினார்; அவர் வராக அவதாரம் எடுத்து., பூமியைக் குடைந்து கொண்டு சென்றார்; இவரும் தோல்வி கண்டனர்இருந்தாலும், சிவனின் முடியைப் பார்த்து அவர் தலையில் இருந்த தாழம்பூவை எடுத்த வந்ததாகப் பொய் சொன்னார்; எனவே பிரம்மனுக்கு வழிபாட்டுக் கோயில் இல்லை என்று சாபமிட்டார் சிவன்; அந்த தாழம்பூவும் பொய் சொன்னதால், அதையும் சிவன் தன் பூஜைக்கு ஏற்றுக் கொள்வதில்லையாம்; மற்றொரு கதையும் உண்டு, சிவன் கோபப்பட்டு, பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை கொய்து எடுத்துவிட்டார் என்றும், அதனால்தான், பிரம்மாவுக்கு நான்கு தலைகள் மட்டும் உள்ளதாகச் சொல்வர்; சிவன் அவ்வாறு ஒரு தலையை வெட்டியதால், கொலை பாவமான, பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டதாம்;

தட்சன்:
பிரம்மாவின் 10 புத்திரர்களில் தட்சனும் ஒருவர்; தட்சனின் மனைவி பெயர் பிரசுதி; இவர்களுக்கு பல மகள்கள் உள்ளனராம்; அவர்கள்: அதிதி, திதி, தனு, கலா, தனயு, சின்ஹிகா, குரோதா, பிரதா, விஸ்வா, வினதா, கபிலா, முனி, கத்ரு, தாட்சாயிணி, ரேவதி, ரதி, மற்றும் கார்த்திகை உட்பட 27 நட்சத்திரங்கள்; ஆக மொத்தம் தட்சனுக்கு 60 பெண்கள் (புத்திரிகள்);

தாட்சாயிணி:
இதில் தட்சனின் ஒரு மகள் பெயர் தாட்சாயிணி; இவள் தானே முடிவெடுத்து, சிவனை மணந்து கொள்கிறாள்;

தட்சனின் பெண்களில் 10 பேரை எமனுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார்; 13 மகள்களை காசியப முனிவருக்கு திருமணம் செய்து கொடுக்கிறார்; 27 பெண்களை சோமன் என்று சொல்லும் சந்திரனுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார்; ரதி என்ற பெண்ணை மன்மதன் என்பவனுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார்; மற்ற பெண்களை முனிவர்களுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார்;

தட்சன் மகள் அதிதியின் வாரிசுகள் ஆதித்தியர்கள்;
தட்சன் மகள் திதியின் வாரிசுகள் - தைத்தியர்கள்;
தட்சன் மகள் தனுவின் வாரிசுகள் - தானவர்கள்;
தட்சன் மகள் அரிஷ்டாவின் வாரிசுகள் - கந்தர்வர்கள்;
தட்சன் மகன் காசாவின் வாரிசுகள் - யட்சர்கள்;
தட்சன் மகள் சுரபியின் வாரிசுகள் - பசுக்கள், எருமைகள்;
தட்சன் மகள் வினிதாவின் வாரிசுகள் - கருடன்கள்;
தட்சினின் மகள்கத்ருவின் வாரிசுகள் - பாம்புகள்;
தட்சனின் மகள் முனியின் வாரிசுகள் - அரம்பையர்கள்;

தாட்சாயிணி:
பிரம்மாவின் மகனான தட்சனின் மகள்கள் 60 பேரில் இந்த தாட்சாயிணியும் ஒருவர்; தன் தந்தை பேச்சைக் கேட்காமல், இவர், சிவனை திருமணம் செய்து கொண்டார்; தட்சனுக்கு சிவனின் மீது கோபம்; எனவே அவரை அடக்க நினைத்து, யாகம் ஒன்றை தட்சன் நடத்துகிறார்; மருமகனுக்கு அழைப்பு அனுப்பவில்லை; நியாயம் கேட்கச் சென்ற மகள் தாட்சாயிணி அந்த யாக நெருப்பில் விழுந்து இறக்கிறார்; சிவன், இறந்த தாட்சாயிணி உடலை தூக்கிக் கொண்டு அலைவதைப் பார்த்த திருமால், அந்த உடலை தன் சக்கராயுதத்தால் தகர்த்து பல பகுதிகளாக சிதைக்கிறார்; அது பிரிந்து இந்த பூமியில் பல இடங்களில் சிதறி விழுகிறது; அந்த இடங்கள் அனைத்தும் சக்தி பீடங்களாக இருக்கின்றதாம்;

பார்வதி:
மலை அரசன் இமவான் என்பவரின் மகள் இந்த பார்வதி; பிள்ளையார், முருகனின் தாய் இவர்தான்; திருமாலின் தங்கை என்றும் கூறப்படுகிறார்; மூன்று தேவியர்களான திருமகள் என்னும் லக்ஷ்மி, கலைமகள் என்னும் சரஸ்வதி இவர்களுடன் சிவனின் மனைவியான பார்வதி மலைமகள் என்று அழைக்கப் படுகிறார்; இவரே சிவனுடன் இணைந்து சிவசக்தியாக விளங்குவதாக இந்து மதம் கூறுகிறது; மலை என்றால் பர்வதம் என்று பெயர்; மலை மகள் என்பதால் பார்வதி என்று பெயர்;

சிவன்:
சிவன் என்றால் சிவந்தவன் என்று பொருளாம்; சேயோன் என்றும் பெயர்; சிவன் அகங்காரத்தை அழிப்பவன் என்ற முறையில் "அழிக்கும் கடவுளாக" கருதப்படுகிறாராம்


சிவன் அழிவில்லாதவன்; ஆதியில் அவன் மட்டுமே இருந்தான் என்றும், அவன் தன் இடப்பாகத்தை சக்தி உருவாக்கி பிரித்தான் என்றும், இருவரும் ஆனந்த தாண்டவம் ஆடி, அண்ட சராசரங்களை உருவாக்கினர் என்றும் நம்பப் படுகிறது; முடிவு நாளில் ஊழித்தாண்டவம் ஆடி எல்லோரையும் தன்னுள்ளே அடக்கிக் கொள்கிறார் என்றும் நம்பப்படுகிறது;
**

Friday, October 16, 2015

பிரம்மா (Brahma)

பிரம்மா:
இந்த உலகில் உள்ள உயிர்கள் தோன்றுவதற்கு காரணமானவர் இந்த பிரம்மா; சிவன் கடவுளாகவும், பிரம்மா படைக்கும் தொழிலைச் செய்பவராகவும் சொல்கிறார்கள். இந்த உலகம் தோன்றி மறையக்கூடியது. நிலை இல்லாதது. எனவே ஒவ்வொரு உலகம் தோன்றும் போதும் ஒவ்வொரு பிரம்மா தோன்றுவார் என்கிறார்கள். இந்தப் பிரபஞ்சமானது தோன்றி, இருந்து, பின்னர் சிவனில் ஒடுங்கி மறையும் தன்மை கொண்டதாம். பின்னர், அந்தச் சிவனிலிருந்து புதிய பிரபஞ்சம் தோன்றுமாம்.
ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் உயிர்களைத் தோற்றுவிப்பது அந்தந்த பிரபஞ்சத்தில் உள்ள பிரம்மாக்கள். இவரைப் பொதுவாக பிரம்மா என்று கூறுகிறார்கள். இந்த பிரம்மாவின் துனைவிதான் சரஸ்வதி.
இந்த பிரம்மா படைப்பைப்பற்றி ஒரு வேடிக்கை கதை மூலம் அந்த விஞ்ஞானத்தை விளக்குகிறார்கள்.
தான்தான் இந்த பிரபஞ்சத்தையே படைக்கு பிரம்மா, என்று அந்த பிரம்மா, பிரமிப்பாக நினைத்து கர்வம் கொண்டாராம். இது சிவனுக்கு கோபத்தை உண்டாக்கி விட்டதாம். அவரின் நெற்றிக்கண் நெருப்பிலிருந்து வைரவக் கடவுள் தோன்றினாராம். அந்த வைரவக்கடவுள் நேராக பிரம்மாவிடம் சென்று, அவரின் ஒரு தலையை வெட்டி விடுகிறார். பிரம்மாவுக்கு ஏற்கனவே ஐந்து தலைகள் இருந்ததாம். ஒரு தலை, வெட்டப்பட்டபின்னர், இப்போது பிரம்மாவுக்கு நான்கு தலைகள் மட்டுமே இருக்கிறது. அதனால்தான் பிரம்மாவை "நான்முகன்" (நான்கு முகங்கள் கொண்டவன்) என்று சொல்கிறார்களாம். இவரை சதுர்முகன் (நான்கு முகம்) என்றும் சொல்வார்களாம்.
இந்த பிரம்மா சில சமயங்களில், அவரின் படைப்புத் தொழிலை மறந்தும் விடுவாராம். அப்படி மறந்த நேரத்தில் ஒரு முறை, சிவனை வழிபட்டு, அவரே தமக்கு மகனாப் பிறந்து, மற்ற உயிர்களின் சிருஷ்டி என்னும் பிறப்பை தொடர்ந்தார் என்றும் சில புராணங்கள் கூறுகின்றன.
சிவனின் புத்திரர் சுப்பிரமணியக் கடவுள் ஒரு முறை இந்த பிரம்மா சிருஷ்டி மந்திரத்தை சொல்ல மறந்துவிட்டார் என்ற காரணத்தை வைத்து, பிரம்மாவை சிறையில் அடைத்து வைத்துவிட்டாராம். சுப்பிரமணியக் கடவுளே, பிரபஞ்சத்தின் உயிர்களை உருவாக்கும் சிருஷ்டி வேலையைச் செய்தார் என்கிறது கந்தபுராணம்.
ஒவ்வொரு பிரம்மாவும், இந்த பிரபஞ்சம் அழியும் காலமான மகாபிரளயம் வரும்போது இந்த பிரபஞ்சம் முழுவதும் அழிந்து விடுமாம். பிரம்மாவும் அழிந்து விடுவாராம். அதாவது இந்த பிரபஞ்சம் சிவனில் (black hole) பிரபஞ்சத்தின் மையப்பகுதியில் ஒடுங்கிவிடுமாம், அதாவது இந்தப் பிரமாண்ட பிரபஞ்சம் ஒரு புள்ளியில் ஒடுங்கி அடங்கிவிடுமாம். அது மறுபடியும் அங்கிருந்தே புதிதாகத் தோன்றி, இந்த பிரபஞ்ச அளவுக்கு விரிந்தும் விடுமாம். அப்போது இந்த உயிர்களைப் படைப்பதற்காக புதிய பிரம்மாவும் பிறப்பாராம்.
இதை இப்படி வேடிக்கையாக சொல்கிறார்கள் புராணங்களில்:-
ஒவ்வொரு பிரம்மாவின் முடிவிலும் அவரின் தலையைக் கொய்து, அந்த பிரம்மாவின் மண்டை ஓட்டை எடுத்து, சிவன் ஒரு கயிறில் கோர்த்து தன் கழுத்தில் அணிந்து கொள்வாராம். ஒவ்வொரு பிரபஞ்ச முடிவிலும் இது நடப்பதால், சிவனின் கழுத்தில் பல மண்டை ஒடுகள் உள்ளன. அதைக் கொண்டே இதுவரை எத்தனை பிரபஞ்சங்கள் அழிந்தன என்று கணக்கிட்டுக் கொள்ளலாம்.
இதை எதற்காகச் சொல்கிறார்கள் என்றால் -- இந்த பிரபஞ்சம் நிரந்தரமானது அல்ல; இது தோன்றி மறையும் இயல்புடையது; ஆனால் நிரந்தரமானவன் சிவன்; அவனே நிலையானவன்; எப்போதும் அழியாது எஞ்சி நிற்பவன் சிவன் என்னும் கடவுள் ஒருவனே என்ற விஞ்ஞான உண்மையை உணர்த்தவே இவ்வளவு புராண கதைகளும்.

**