Showing posts with label சிவன். Show all posts
Showing posts with label சிவன். Show all posts

Friday, April 15, 2016

சிவன்

சிவன்

சிவன் என்றால் மங்களரூபி என்று பொருளாம்;

சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுபவர் 'சைவர்' எனப்படுவர்; இவர்களின் சமயம் 'சைவ சமயம்' என்றும் பெயர்படும்;

மொத்தமுள்ள 18 புராணங்களில் 10 புராணங்கள் சிவனைச் சார்ந்து உள்ளன;

உருவம் இல்லாமல் (அருவமாய்) இருக்கும் திருமேனிக்கு "சிவன்" என்று பெயர்;

உருவமாயும் அருவமாயும் (இரண்டு நிலைசேர்ந்து) இருக்கும் திருமேனிக்கு "சதாசிவன்" என்று பெயர்;
உருவமாய் இருக்கும் திருமேனிக்கு "மகேஸ்வரன்" என்று பெயர்;

பிரம்மனை சிருஷ்டி கர்த்தா என்பர்;
விஷ்ணுவை காவற் கர்த்தா என்பர்;
சிவனைச் சங்கார கர்த்தா என்பர்;

சங்கார கிருத்தியத்துக்குள்ளே சிருஷ்டியும், காவலும் இருப்பதால், சிவனே முழுமுதற் கடவுளாக ஏற்கப்படுகிறார்;

இவருக்கு வேறு பெயர்களும் (காரணப்பெயர்கள்) உண்டு;

விருஷபத்துவஜன்
உமாபதி
சர்மவாசன்
நந்நிவாகனன்
சூலி
கபாலமாலாதரன்
சர்ப்ப குண்டலன்
காலகாலன்
நீலகண்டன்
காங்காதரன்
திரிநேத்திரன்
சந்திரசேகரன்
திரிபுராந்தகன்

சிவனை, மகாலிங்கம், அர்த்தநாரீஸ்வரர், நடேசர் முதலிய இருபத்தைந்து மூர்த்திகளாக தியானித்து வழிபடுவர்; சிவனுக்கு சக்தி உமாதேவி என்பர்;
25 மூர்த்திகள்:
லிங்கமூர்த்தி
சுகாசன மூர்த்தி
உமாசக மூர்த்தி
கல்யாண சுந்தர மூர்த்தி
அர்த்த நாரீசுவர மூர்த்தி
சோமஸ்கந்த மூர்த்தி
சக்கரப் பிரதான மூர்த்தி
திரிமூர்த்தி
அர்தாங்க விஷ்ணுமூர்த்தி
தட்சிணா மூர்த்தி
பிட்சாடன மூர்த்தி
கங்காள மூர்த்தி
காம சம்கார மூர்த்தி
காலாரி
ஜலந்தாரி
திரிபுரசம்கார மூர்த்தி
சரப மூர்த்தி
நீலகண்ட மூர்த்தி
திரிபாத மூர்த்தி
ஏகபாத மூர்த்தி
வைரவமூர்த்தி
விருஷபாருட மூர்த்தி
சந்திரசேகர மூர்த்தி
நடராஜ மூர்த்தி
கங்காதர மூர்த்தி
**



Tuesday, March 29, 2016

பிரஜாபதி

பிரஜாபதி என்பவர்கள் பிரம்மாவால் படைக்கப்பட்டவர்கள்; பிரம்மாவின் படைப்புத் தொழிலைச் செய்வதற்காக இவர்கள் படைக்கப்பட்டார்களாம்; மொத்தம் 10 பிரஜாபதிகள் உள்ளனர்; மரீசி, அத்திர, அங்கிரசர், புலஸ்தியர், புலகர், கிருது, வசிஷ்டர், தக்கன், பிருகு, நாரதர் ஆகியோர்; (மகாபாரதக் கதைப்படி மேலும் சிலரும் பிரஜாபதிகளே! அவர்கள், நாரதர், காசிபர், கௌதமர், பிரஹலாதர், கர்த்தமர் ஆகியோர்);

பிரம்மா:
மும்மூர்த்திகளில் இவரும் ஒருவர்; படைக்கும் தொழிலைச் செய்பவர்; (மும்மூர்த்திகளில் மற்ற இருவர், திருமால், சிவன்); பிரம்மாவின் மனைவி சரஸ்வதி; சரஸ்வதியை கலைமகள் என்பர்; பிரம்மாவும், சரஸ்வதியும் சத்ய லோகத்தில் வசிக்கின்றனர்; பிரம்மாவுக்கு நான்கு தலைகள், நான்கு கைகள்; இவர் அன்னப்பறவையில் அமர்ந்திருப்பார்; இவருக்கு நான்கு முகங்கள் இருப்பதால் "நான்முகன்" என்று கூறுகின்றனர்;

பிரம்மா, நான்கு யுகங்களான கிரேத யுகம், திரேதயுகம், துவாபர யுகம், கலியுகம் என மொத்தம் 43, 20,000 ஆண்டுகள் கொண்ட இரண்டாயிரம் நான்கு யுகங்கள் என்னும் சதுர்யுகங்கள் முடிந்தால், பிரம்மனின் ஆயுளும் முடியும்; திருப்பாற்கடலை கடைந்தபோது, அதிலிருந்து தோன்றிய சரஸ்வதியை மணந்து கொண்டார்; பிரம்மா, தன் மனோசக்தியால், பிரஜாபதிகளை படைத்துக் கொண்டார்; அவர்கள் மூலமே படைத்துத் தொழிலை தொடங்கினார்;

திருமாலுக்கும், பிரம்மாவுக்கும் யார் பெரியவர் என்று போட்டியாம்; அதனால் சிவனிடம் சென்று கேட்டுள்ளனர்; அவர் தன் முடியை பிரம்மாவைப் பார்த்து வர அனுப்பினார்; பிரம்மா தன் வாகனமான அன்னப் பறவையில் சிவனின் முடி தேடிச் சென்றார்; விஷ்ணுவை, சிவனின் பாதத்தைப் பார்த்து வர அனுப்பினார்; அவர் வராக அவதாரம் எடுத்து., பூமியைக் குடைந்து கொண்டு சென்றார்; இவரும் தோல்வி கண்டனர்இருந்தாலும், சிவனின் முடியைப் பார்த்து அவர் தலையில் இருந்த தாழம்பூவை எடுத்த வந்ததாகப் பொய் சொன்னார்; எனவே பிரம்மனுக்கு வழிபாட்டுக் கோயில் இல்லை என்று சாபமிட்டார் சிவன்; அந்த தாழம்பூவும் பொய் சொன்னதால், அதையும் சிவன் தன் பூஜைக்கு ஏற்றுக் கொள்வதில்லையாம்; மற்றொரு கதையும் உண்டு, சிவன் கோபப்பட்டு, பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை கொய்து எடுத்துவிட்டார் என்றும், அதனால்தான், பிரம்மாவுக்கு நான்கு தலைகள் மட்டும் உள்ளதாகச் சொல்வர்; சிவன் அவ்வாறு ஒரு தலையை வெட்டியதால், கொலை பாவமான, பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டதாம்;

தட்சன்:
பிரம்மாவின் 10 புத்திரர்களில் தட்சனும் ஒருவர்; தட்சனின் மனைவி பெயர் பிரசுதி; இவர்களுக்கு பல மகள்கள் உள்ளனராம்; அவர்கள்: அதிதி, திதி, தனு, கலா, தனயு, சின்ஹிகா, குரோதா, பிரதா, விஸ்வா, வினதா, கபிலா, முனி, கத்ரு, தாட்சாயிணி, ரேவதி, ரதி, மற்றும் கார்த்திகை உட்பட 27 நட்சத்திரங்கள்; ஆக மொத்தம் தட்சனுக்கு 60 பெண்கள் (புத்திரிகள்);

தாட்சாயிணி:
இதில் தட்சனின் ஒரு மகள் பெயர் தாட்சாயிணி; இவள் தானே முடிவெடுத்து, சிவனை மணந்து கொள்கிறாள்;

தட்சனின் பெண்களில் 10 பேரை எமனுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார்; 13 மகள்களை காசியப முனிவருக்கு திருமணம் செய்து கொடுக்கிறார்; 27 பெண்களை சோமன் என்று சொல்லும் சந்திரனுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார்; ரதி என்ற பெண்ணை மன்மதன் என்பவனுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார்; மற்ற பெண்களை முனிவர்களுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார்;

தட்சன் மகள் அதிதியின் வாரிசுகள் ஆதித்தியர்கள்;
தட்சன் மகள் திதியின் வாரிசுகள் - தைத்தியர்கள்;
தட்சன் மகள் தனுவின் வாரிசுகள் - தானவர்கள்;
தட்சன் மகள் அரிஷ்டாவின் வாரிசுகள் - கந்தர்வர்கள்;
தட்சன் மகன் காசாவின் வாரிசுகள் - யட்சர்கள்;
தட்சன் மகள் சுரபியின் வாரிசுகள் - பசுக்கள், எருமைகள்;
தட்சன் மகள் வினிதாவின் வாரிசுகள் - கருடன்கள்;
தட்சினின் மகள்கத்ருவின் வாரிசுகள் - பாம்புகள்;
தட்சனின் மகள் முனியின் வாரிசுகள் - அரம்பையர்கள்;

தாட்சாயிணி:
பிரம்மாவின் மகனான தட்சனின் மகள்கள் 60 பேரில் இந்த தாட்சாயிணியும் ஒருவர்; தன் தந்தை பேச்சைக் கேட்காமல், இவர், சிவனை திருமணம் செய்து கொண்டார்; தட்சனுக்கு சிவனின் மீது கோபம்; எனவே அவரை அடக்க நினைத்து, யாகம் ஒன்றை தட்சன் நடத்துகிறார்; மருமகனுக்கு அழைப்பு அனுப்பவில்லை; நியாயம் கேட்கச் சென்ற மகள் தாட்சாயிணி அந்த யாக நெருப்பில் விழுந்து இறக்கிறார்; சிவன், இறந்த தாட்சாயிணி உடலை தூக்கிக் கொண்டு அலைவதைப் பார்த்த திருமால், அந்த உடலை தன் சக்கராயுதத்தால் தகர்த்து பல பகுதிகளாக சிதைக்கிறார்; அது பிரிந்து இந்த பூமியில் பல இடங்களில் சிதறி விழுகிறது; அந்த இடங்கள் அனைத்தும் சக்தி பீடங்களாக இருக்கின்றதாம்;

பார்வதி:
மலை அரசன் இமவான் என்பவரின் மகள் இந்த பார்வதி; பிள்ளையார், முருகனின் தாய் இவர்தான்; திருமாலின் தங்கை என்றும் கூறப்படுகிறார்; மூன்று தேவியர்களான திருமகள் என்னும் லக்ஷ்மி, கலைமகள் என்னும் சரஸ்வதி இவர்களுடன் சிவனின் மனைவியான பார்வதி மலைமகள் என்று அழைக்கப் படுகிறார்; இவரே சிவனுடன் இணைந்து சிவசக்தியாக விளங்குவதாக இந்து மதம் கூறுகிறது; மலை என்றால் பர்வதம் என்று பெயர்; மலை மகள் என்பதால் பார்வதி என்று பெயர்;

சிவன்:
சிவன் என்றால் சிவந்தவன் என்று பொருளாம்; சேயோன் என்றும் பெயர்; சிவன் அகங்காரத்தை அழிப்பவன் என்ற முறையில் "அழிக்கும் கடவுளாக" கருதப்படுகிறாராம்


சிவன் அழிவில்லாதவன்; ஆதியில் அவன் மட்டுமே இருந்தான் என்றும், அவன் தன் இடப்பாகத்தை சக்தி உருவாக்கி பிரித்தான் என்றும், இருவரும் ஆனந்த தாண்டவம் ஆடி, அண்ட சராசரங்களை உருவாக்கினர் என்றும் நம்பப் படுகிறது; முடிவு நாளில் ஊழித்தாண்டவம் ஆடி எல்லோரையும் தன்னுள்ளே அடக்கிக் கொள்கிறார் என்றும் நம்பப்படுகிறது;
**

Saturday, March 19, 2016

கங்கை


கங்கை எப்படி புண்ணிய நதியானது:

கங்கை, ஆகாச கங்கை என்ற பெயரில் தேவலோகத்தில்தான் இருந்தது; அதை, பகீரதன், தன்னுடைய விடா முயற்சியானால், இமயமலையில் உற்பத்தி ஆகுமாறு ஏற்படுத்தினான்; தேவலோகத்திலிருந்து கீழே இறங்கி வந்து, மண்ணுலகில் இமயமலையில் தோன்றி ஓடுவதால், இது மகா புண்ணிய நதியாகியது;

பகீரதன் முன்னோர்கள் சகரர், கபிலர் இருவரும் இறந்துவிட்ட பின்னரும், நற்கதி அடையாமல் பாதாள உலகில் கிடந்து வருந்தி வந்தனர்; இதை அறிந்த பகீரதன், ஆகாச கங்கையை நோக்கி கடும் தவத்தில் இருந்தான்; ஆகாச கங்கையும் மனமிரங்கி அவனிடம் வந்து தோன்றியது; பூமியில் கங்கையாக ஓடினால், அவன் பிதிர்களின் பாவம் நீங்கி மோட்சம் செல்வார்கள் என்று கேட்டான்; ஆனால் ஆகாச கங்கையோ, நான் ஓடும் பிரவாக வேகத்தைத் தாங்குவதற்கு இந்த பூமியால் முடியாது, எனவே நான் கீழே இறங்கி பூமியில் ஓட மாட்டேன் என்று மறுத்து விட்டது; அவன் மறுபடியும் கடும் தவம் புரிந்தான்; அதைப் பார்த்து மனமிரங்கிய ஆகாச கங்கை அவனிடம் வந்து, "என் வேகத்தைத் தாங்குபவர் இங்கு யாராவது இருந்தால், நான் பெருக்கெடுத்து வருகிறேன்" என்று கூறிவிட்டது; சிவன்தான் அதற்கு சரியானவர் என பகீரதன் நினைத்தான்;

பகீரதன், சிவனை நோக்கிக் கடும் தவம் இருக்கிறான்; சிவன் அவன் முன் தோன்றுகிறார்; தான், ஆகாச கங்கையை தன் முடியில் தாங்கிக் கொள்வதாக உறுதி அளிக்கிறார்; முழுக் கங்கையையும் சிவனின் முடியே தாங்கிக் கொண்டது; நதி, பூமியில் ஓடவில்லை; இதை அறிந்த பகீரதன், சிவனை வேண்டி, கங்கையை தரையில், பூமியில் விடும்படி கேட்கிறான்

சிவனும், தன் தலையில் தாங்கிய ஆகாச கங்கையின் நீரில், ஏழு துளிகள் மட்டும் பூமியில் இமயமலையில் விடுகிறார்; அந்த ஏழு துளிகளும் ஏழு நதிப் பிரவாகமாகி, அங்கு இமயமலையில் தவம் செய்து கொண்டிருந்த ஜன்னுவர் முனிவரின் ஆசிரமத்தை அழித்தது; ஜன்னுவ முனிவருக்கு கோபம் வந்து, அந்த நதியை அழித்தார்; உடனே பகீரதன், அந்த ஜன்னுவ முனிவரை வேண்டி தவம் செய்து, அவரிடம் அனுமதி கேட்டான்; அவரும் அந்த நதியைத் தன் காதுவழியே வெளியே செல்லும்படி கேட்டுக் கொண்டார்;

இப்படியாக, ஆகாச கங்கை பூமியில் பெருக்கெடுத்து, பகீரதன் வழிகாட்ட, அது பாதள உலகம் சென்று, அங்கு பகீரதன் பிதர்களின் அஸ்தியை பெற்று சுத்தி செய்து அவர்களுக்கு மோட்சம் அளித்தது;

இதை மிகவும் சிரமப்பட்டு, பிரயத்தனப்பட்டு, பகீரதன் பூமிக்கு கொண்டு வந்தான்;

இந்த கங்கையை, பகீரதன் கொண்டு வந்ததால் பகீரதி என்று பெயர் பெற்றது;

ஜன்னுவ முனிவர் காதுவழியே வருவதால், ஜானவி என்றும் பெயர் பெற்றது;

இது, ஆகாயத்திலிருந்து வந்து, பூமியை அடைந்து, பின்னர், பாதாள உலகத்துக்கும் செல்வதால், திரிபதகை என்றும் பெயர் பெற்றது;

இந்த கங்கை நீர் எப்போதும் அழுக்கு அடைவதில்லையாம்; இதில் கிருமிகளும் உற்பத்தி ஆவதில்லையாம்;

கங்கை என்ற அதிதேவதை, பிரம்மாவின் சாபத்தால், மானிடப் பெண்ணாக பிறந்து, பூமியில் உள்ள கங்கையில் திரிந்தாள்; அவளை சந்தனு மன்னர் விரும்பி திருமணம் செய்து கொண்டார்; எட்டு மகன்களை பெற்றாள்; அதில் ஏழு மகன்களை அதே கங்கையில் விட்டுவிட்டாள்; எட்டாவது மகனை மட்டும் கூட்டிச் சென்று வளர்த்து, மன்னரிடமே ஒப்படைத்தாள்; அவரே பிற்காலத்தில் மகாபாரதப் புகழ் பீஷ்மர் ஆவார்;
**