கங்கை எப்படி புண்ணிய
நதியானது:
கங்கை, ஆகாச கங்கை என்ற பெயரில் தேவலோகத்தில்தான் இருந்தது;
அதை, பகீரதன், தன்னுடைய
விடா முயற்சியானால், இமயமலையில் உற்பத்தி ஆகுமாறு
ஏற்படுத்தினான்; தேவலோகத்திலிருந்து கீழே இறங்கி வந்து,
மண்ணுலகில் இமயமலையில் தோன்றி ஓடுவதால், இது
மகா புண்ணிய நதியாகியது;
பகீரதன் முன்னோர்கள்
சகரர், கபிலர் இருவரும் இறந்துவிட்ட
பின்னரும், நற்கதி அடையாமல் பாதாள உலகில் கிடந்து வருந்தி
வந்தனர்; இதை அறிந்த பகீரதன், ஆகாச
கங்கையை நோக்கி கடும் தவத்தில் இருந்தான்; ஆகாச கங்கையும்
மனமிரங்கி அவனிடம் வந்து தோன்றியது; பூமியில் கங்கையாக
ஓடினால், அவன் பிதிர்களின் பாவம் நீங்கி மோட்சம் செல்வார்கள்
என்று கேட்டான்; ஆனால் ஆகாச கங்கையோ, நான்
ஓடும் பிரவாக வேகத்தைத் தாங்குவதற்கு இந்த பூமியால் முடியாது, எனவே நான் கீழே இறங்கி பூமியில் ஓட மாட்டேன் என்று மறுத்து விட்டது;
அவன் மறுபடியும் கடும் தவம் புரிந்தான்; அதைப்
பார்த்து மனமிரங்கிய ஆகாச கங்கை அவனிடம் வந்து, "என்
வேகத்தைத் தாங்குபவர் இங்கு யாராவது இருந்தால், நான்
பெருக்கெடுத்து வருகிறேன்" என்று கூறிவிட்டது; சிவன்தான்
அதற்கு சரியானவர் என பகீரதன் நினைத்தான்;
பகீரதன், சிவனை நோக்கிக் கடும் தவம் இருக்கிறான்; சிவன் அவன் முன் தோன்றுகிறார்; தான், ஆகாச கங்கையை தன் முடியில் தாங்கிக் கொள்வதாக உறுதி அளிக்கிறார்; முழுக் கங்கையையும் சிவனின் முடியே தாங்கிக் கொண்டது; நதி, பூமியில் ஓடவில்லை; இதை
அறிந்த பகீரதன், சிவனை வேண்டி, கங்கையை
தரையில், பூமியில் விடும்படி கேட்கிறான்;
சிவனும், தன் தலையில் தாங்கிய ஆகாச கங்கையின் நீரில்,
ஏழு துளிகள் மட்டும் பூமியில் இமயமலையில் விடுகிறார்; அந்த ஏழு துளிகளும் ஏழு நதிப் பிரவாகமாகி, அங்கு
இமயமலையில் தவம் செய்து கொண்டிருந்த ஜன்னுவர் முனிவரின் ஆசிரமத்தை அழித்தது;
ஜன்னுவ முனிவருக்கு கோபம் வந்து, அந்த நதியை
அழித்தார்; உடனே பகீரதன், அந்த ஜன்னுவ
முனிவரை வேண்டி தவம் செய்து, அவரிடம் அனுமதி கேட்டான்;
அவரும் அந்த நதியைத் தன் காதுவழியே வெளியே செல்லும்படி கேட்டுக்
கொண்டார்;
இப்படியாக, ஆகாச கங்கை பூமியில் பெருக்கெடுத்து, பகீரதன் வழிகாட்ட, அது பாதள உலகம் சென்று, அங்கு பகீரதன் பிதர்களின் அஸ்தியை பெற்று சுத்தி செய்து அவர்களுக்கு
மோட்சம் அளித்தது;
இதை மிகவும்
சிரமப்பட்டு, பிரயத்தனப்பட்டு, பகீரதன் பூமிக்கு கொண்டு வந்தான்;
இந்த கங்கையை, பகீரதன் கொண்டு வந்ததால் பகீரதி என்று பெயர் பெற்றது;
ஜன்னுவ முனிவர்
காதுவழியே வருவதால், ஜானவி என்றும் பெயர்
பெற்றது;
இது, ஆகாயத்திலிருந்து வந்து, பூமியை
அடைந்து, பின்னர், பாதாள உலகத்துக்கும்
செல்வதால், திரிபதகை என்றும் பெயர் பெற்றது;
இந்த கங்கை நீர்
எப்போதும் அழுக்கு அடைவதில்லையாம்; இதில் கிருமிகளும்
உற்பத்தி ஆவதில்லையாம்;
கங்கை என்ற அதிதேவதை, பிரம்மாவின் சாபத்தால், மானிடப்
பெண்ணாக பிறந்து, பூமியில் உள்ள கங்கையில் திரிந்தாள்;
அவளை சந்தனு மன்னர் விரும்பி திருமணம் செய்து கொண்டார்; எட்டு மகன்களை பெற்றாள்; அதில் ஏழு மகன்களை அதே
கங்கையில் விட்டுவிட்டாள்; எட்டாவது மகனை மட்டும் கூட்டிச்
சென்று வளர்த்து, மன்னரிடமே ஒப்படைத்தாள்; அவரே பிற்காலத்தில் மகாபாரதப் புகழ் பீஷ்மர் ஆவார்;
**
No comments:
Post a Comment