Thursday, March 17, 2016

கொடிகளும் படைகளும்

கொடிகளும் படைகளும்

அருகன் வாகனம் = தாமரைப் பூ;
அருகனின் படை = காட்சி, ஞானம், சீலம்;
அருகனின் கொடி = அருள்;

சிவனின் வாகனம் = ரிஷபம் (இடபம்);
சிவனின் படை = மழு, சூலம், பினாகவில்;

விஷ்ணுவின் வாகனம் = கருடன்;
விஷ்ணுவின் கொடி = கருடன்;
விஷ்ணுவின் படை = வில், சக்கரம், சங்கு, வாள், தண்டு என்னும் ஐந்து ஆயுதங்களான பஞ்சாயுதங்கள்;

பிரம்மன் வாகனம் = அன்னப்பறவை;
பிரம்மன் படை = பாசம்;
பிரம்மன் கொடி = வேதம்;
பலதேவன்  படை = கலப்பை;
பலதேவன் கொடி = பனை;

யமன் வாகனம் = எருமை;
யமனின் படை = பாசம், தண்டு;
காலன் படை = கணிச்சி;

குபேரன் வாகனம் = நரவாகனம், புட்பக விமானம்;
சூரியன் வாகனம் = ஒற்றை யாழித் தேர்;
சந்திரன் வாகனம் = முத்து விமானம்;
சுப்பிரமணியர் வாகனம் = யானை, மயில்;
சுப்பிரமணியர் படை = வேல்;
சுப்பிரமணியர் கொடி = சேவல்;
இந்திரன் வாகனம் = ஐராவத யானை;
இந்திரனின் சோலை = கற்பகச் சோலை;
இந்திரனின் குதிரை = உச்சய்ச்சிரவம்;
இந்திரனின் மண்டபம் = சுதன்மை;
இந்திரனின் மாளிகை = வசந்தம்;
இந்திரனின் கொடி = இடியேறு;
காளியின் வாகனம் = சிங்கம்;
காளியின் கொடி = பேய்;
துர்க்கையின் வாகனம் = கலைமான்;
துர்க்கையின் படை = வாள்;
மூதேவியின் வாகனம் = கழுதை;
மூதேவியின் படை = துடைப்பம்;
மூதேவியின் கொடி = காகம்;
**

No comments:

Post a Comment