அத்தித்தல முருகன்
பிள்ளைத் தமிழ்-1
"ஓங்காரக்
கருவாகி உமாகாந்தன் சேயாய்
ஒளிர்ஞான பீடத்தின்
ஒளியாக மேவி
உருப்பெற்ற வேத முதல்
ஒலியான நாதம்
உயர்விந்து கலைகளாய்
ஒருவாது கூடி
ஆங்காரக் குறும்பு
அகல அடியார்கள் உள்ளத்து
அகலாது
வீற்றிருக்கும் ஐங்கரத் தெய்வம்
அருள்வடிவத்
திருப்பொலிவால் ஆண்டெம்மை உய்க்கும்
அடிமலர்கள் சிரமீது
அணிந்து வகை கொள்வாம்
நீங்காத
நெடுமுகில்கள் நெருங்கி மிகச் சூழ்ந்து
நித்தில வெண் மழைத்
தாரை சொரிகின்ற நாடு
நிருபரென வளமிகுந்த
நெறிச் செல்வர் வாழும்
நிறைபுகழ்சால் கைதை
நகர் என்னும் தெய்வ பூமி
பாங்கான அப்பதியில்
அத்திதலம் மேவிப்
பரத்துவமாம்
விளையாடல் செய்தருளுஞ் சேய்மேல்
பருவரல்கள்
நீக்குபிள்ளைத் தமிழ்மாலை பாடப்
பழகுதமிழ்ச்
சொல்லாட்சி பரக்க வருளென்றே.
"முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பான் எங்கள் முருகன்"; "என்றும் குன்றா அழகும், என்றும்
மாறா இளமையும் வாய்ந்த முருகனை, அவரவர் இதயத்தில் இருத்தி,
பாமாலை பாடி துதித்துள்ளனர்;
இலங்கையில்
யாழ்பாணத்துக்கு அருகில் கைதடி என்னும் ஊரில் இருப்பவனே "அத்திதல
முருகன்"; இவனுக்கு "மாவடிக்
கந்தன்" என்றும் பெயருண்டு; அலரி, அத்தி, மா, ஆகிய மரங்களுக்கு
நடுவே மணியோசை கேட்டு வந்ததை அறிந்து, அங்கு வேலை வைத்து
வணங்கி, பின்னர் முருகனுக்கு ஆலயம் அமைத்தனராம்;
இந்த அத்தி தல
முருகன் பிள்ளைத் தமிழை இயற்றியவர் மு.தியாகராசா;
**
No comments:
Post a Comment