கந்தரனுபூதி-49
தன்னம் தனிநின்றது
தானறிய
வின்னம் ஒருவர்க்கு
இசைவிப்பதுவோ
மின்னும் கதிர்வேல்
விகிர்தா நினைவார்
கின்னம் களையும்
கிர்பைசூழ் சுடரே.
(தன்னம் தனியாக நின்ற, தனித்த, பரம்பொருள் இதுதான்
என்று அறிந்து, இன்னும் ஒருவர்க்கு சொல்ல இயலுமா! இன்னும்
கதிர்வேலை உடைய விகிர்தா! உன்னை நினைப்பவர்களின் கின்னம் என்னும் துயரங்களை
களைந்து நீக்கி கிருபை சூழ வைக்கும் சுடரானவனே!)
தன்னந் தனிநின் றதுதா
னறிய
வின்னம் மொருவர்க்
கிசைவிப் பதுவோ
மின்னுங் கதிர்வேல்
விகிர்தா நினைவார்
கின்னங் களையுங்
கிர்பைசூழ் சுடரே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரனுபூதி பாடல்-49)
**
No comments:
Post a Comment