கந்தரனுபூதி-42
குறியைக் குறியாது
குறித்தறியும்
நெறியைத் தனிவேலை
நிகழ்த்திடலும்
செறிவற்று உலகோடு உரை
சிந்தையும் அற்று
அறிவற்று அறியாமையும்
அற்றதுவே.
(குறிக்கோளை
குறிவைக்காமல், முக்தியை குறித்து அறியும்
நெறியை, தனிவேலை உடையவன் எனக்கு நிகழ்த்தி உள்ளான்! அதனால்,
நான் செறிவு பெற்று, இந்த உலகத்துடன் உரையும்
சிந்தையும் அற்று, எனது அறியாமையும் நீங்கி விட்டதுவே!)
குறியைக் குறியா
துகுறித் தறியு
நெறியைத் தனிவே
லைநிகழ்த் திடலுஞ்
செறிவற் றுலகோ
டுரைசிந் தையுமற்
றறிவற் றறியா மையுமற்
றதுவே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரனுபூதி பாடல்-42)
**
No comments:
Post a Comment