கௌமார பர்வதம்
இது கர்நாடக மாநிலத்தில் உள்ளது; இதன்
உயரம் சுமார் ஆறாயிரம் அடி உயரம்; இதை, “புஷ்பகிரி” என்றும், “சுப்ரமண்ய மலை”
என்றும் கூறுவர்; குடகு மலைப் பகுதியில் இந்த சுப்ரமண்ய மலைதான் உயரமானது;
இங்குதான் கௌமாரர்கள் என்னும் முருக பக்தர்கள் வழிபாடு நடத்தும் முக்கிய இடம்
உள்ளது; இங்கு வழிபாடு நடத்தினால், முக்தி கிடைக்கும் என்பது கௌமாரர்களின் அசைக்க
முடியாத நம்பிக்கை; இங்கு இருக்கும் கோயிலுக்குப் பெயர் குக்கே சுப்ரமண்யா ஆலயம்;
வாசுகி:
இங்குதான் வாசுகி என்னும் பாம்பும்,
அந்தக் கூட்டங்களைச் சேர்ந்த மற்ற பாம்புகளும், அதன் எதிரியான கருடனுக்குப்
பயந்துகொண்டு, இங்கு வந்து சுப்ரமணியனை அடைக்கலம் கேட்டு அங்கு வாழ்கின்றனவாம்;
குமாரபர்வதம்:
சண்முகன், “தாரகனையும், பத்மாசுரனையும்”
கொன்று அழித்தபிறகு, தன் சகோதரன் கணேசனுடனும், தன் படைகளுடனும், இந்த மலையான குமார
பர்வதத்துக்கு வருகிறான்; அங்கு இந்திரனும் (மாமனார்) மற்ற தேவர்களும் சண்முகனை
வரவேற்று வணங்குகிறார்கள்; அப்படி வணங்கும்போது, சண்முகனை “குமாரசாமி கடவுள்” என
வணங்குகிறார்கள்; *(அதனால்தான் கர்நாடகாவில் அதிகமானவர்களின் பெயர்கள்
குமாரசாமியாக இருக்கிறது); அங்குதான், இந்திரன், தன் மகள் தேவசேனாவை சண்முகன்
என்கிற குமாரசாமிக்கு திருமணம் செய்து கொடுக்க ஒப்புக் கொள்கிறான்; அங்கு,
திருமணம் நடக்கிறதாம்; பிரம்மன், விஷ்ணு, ருத்ரன், மற்ற கடவுள்கள் எல்லோரும்
வந்திருக்கிறார்கள்; அங்கு குமாரசாமிக்கு அபிஷேகம் நடக்கிறது; எல்லா நதிகளின்
நீர்களும் அபிஷேகத்தில் ஊற்றுகிறார்கள்; அவை ஒடி, வழிந்த நதிக்குப் பெயர்தான் “குமாரதாரா”;
அங்குதான், கருடனுக்கு பயந்து கொண்டு தவம் செய்த வாசுகி என்ற பாம்புக்கும் அபயம்
காத்து வரம் தருகிறான்;
**
No comments:
Post a Comment