கந்தரனுபூதி-47
ஆறாறையும் நீத்து
அதன் மேனிலையைப்
பேறா அடியேன்
பெறுமாறு உளதோ
சீறா வரு சூர்
சிதைவித்து இமையோர்
கூறா உலகம்
குளிர்வித்தவனே.
(ஆறு ஆறான மொத்தம் 36
தத்துவங்களையும் நீந்திக் கடந்து, அதன் மேல் நிலையை அடையும்
பேற்றை பெற எனக்கு வழி உள்ளதா! கோபத்துடன் வந்த சூர்பர்மனை சிதைத்து அழித்து,
இமையோர் என்னும் கண் இமைக்காத வானவர்கள் மகிழும்படி அவர்களின் கூறா
உலகத்தை குளிர்வித்தவனே!)
ஆறா றையுநீத் ததன்மே
னிலையைப்
பேறா வடியேன் பெறுமா
றுளதோ
சீறா வருசூர்
சிதைவித் திமையோர்
கூறா வுலகங்
குளிர்வித் தவனே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரனுபூதி பாடல்-47)
**
No comments:
Post a Comment