Saturday, March 26, 2016

ஆன்ம தத்துவங்கள்


ஆன்ம தத்துவங்கள்

ஆன்ம தத்துவங்கள் 24:
1)பூதங்கள் ஐந்து;
1. பிருதிவி (மண்)
2. அப்பு (நீர்)
3. தேயு (தீ)
4. வாயு (காற்று)
5. ஆகாயம் (வெளி)
2) புலன்கள் ஐந்து
1. சத்தம் (ஓசை)
2. பரிசம் (ஊறு)
3. உருவம் (ஒளி)
4. இரசம் (சுவை)
5. கந்தம் (நாற்றம்)
3.ஞான இந்திரியங்கள் ஐந்து
1. மெய்
2. நா
3. கண்
4. மூக்கு
5. செவி
4) கன்ம (கர்ம) இந்திரியங்கள் -ஐந்து (தொழில் கருவிகள்)
1. வாய்
2. கால்
3. கை
4. எருவாய்
5. கருவாய்
5) அந்தகரணங்கள் – நான்கு
1. மனம்
2. புத்தி
3. சித்தம்
4. அகங்காரம்
இவை எல்லாம், நம் ஆன்மாக்கள், பலன்களை பெறுவதற்கு கருவிகளாக உள்ளன;
தத்துவம்:
தத்துவம் என்றால் உண்மை, சுபாவம்;
நியாயம் என்பது அதன் விரிந்த கொள்கையே;
அண்டத்தையும், பிண்டத்தையும், தத்துவங்கள் மூலமாகவே இறைவனை நின்று நடத்துகிறான் என்கிறது சைவ சமயம்;
தத்துவங்கள் 60:
1) பிருதிவி (மண்);
மயிர், எலும்பு, தோல், நரம்பு, தசை ஆக மொத்தம்-5;
2) அப்பு (நீர்);
ஓடும்நீர், உதிரம், சுக்கிலம், மூளை, மச்சை ஆக-5;
3) தேயு (நெருப்பு):
உணவு, நித்திரை, பயம், மைதுனம், சோம்பல், ஆக-5;
4) வாயு (காற்று);
ஓடல், நடத்தல், இருத்தல், நிற்றல், கிடத்தல் ஆக 5;
5) ஆகாயம் (வெளி):
காமம், குரோதம், உலோபம், மோகம், மதம் என 5;
6) தச வாயுக்கள்: (பத்து வாயுக்கள்)
பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்செயன் ஆக 10;
7) தச நாடிகள் (பத்து நாடிகள்):
இடைகலை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, அத்திரி, சுகுவை, அலம்புடை, புருடன், குரு, சங்கினி ஆன -10;
8) வசனாதிகள் (தொழில் கருவிகள்):
கதைத்தல் (பேசுதல்), நடத்தல், கொடுத்தல்-ஏற்றல், மல சலம் கழித்தல், மகிழ்தல் (ஆனந்தம்) ஆக-5:
9) வாக்குகள்:
சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி ஆக-4;
10) குணங்கள்:
சாத்விகம், இராசதம், தாமதம், ஆக-3;
11) அகங்காரம்;
சாத்வீக அகங்காரம், இராசத அங்காரம், தாமத அகங்காரம் ஆக-3;

**

1 comment:

  1. அரிய வகை தகவல். நன்றி

    ReplyDelete