கந்தரனுபூதி-39
மாவேழ் சனனம் கெட
மாயை விடா
மூவேடனை என்று
முடிந்திடுமோ
கோவே குறமின் கொடிதோள்
புணரும்
தேவே சிவசங்கர
தேசிகனே.
(மாவேழ் என்னும்
பெரிய ஏழுவகைப் பிறப்புகளையும் விட்டு நீங்குவதற்கான மாயையான மூவேடன் என்னும் மூன்று வகை
ஆசைகளான, மண், பெண்,
பொன் ஆசைகைள நீக்கி, பிறப்புகளை விட்டு அகல,
எப்போதுதான் என்னால் முடியுமோ! கோவேந்தனே! மின்னல் கொடி போன்ற குறத்தியின்
தோள்களை தழுவும் தேவனே! சிவசங்கரனான சிவனுக்கு குருவான தேசிகனே!)
மாவேழ் சனனங் கெடமா
யைவிடா
மூவே டனையென்
றுமுடிந் திடுமோ
கோவே குறமின்
கொடிதோள் புணருந்
தேவே சிவசங் கரதே
சிகனே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரனுபூதி பாடல்-39)
**
No comments:
Post a Comment