அத்தி தல முருகன்
பிள்ளைத் தமிழ்-2
(சிவன் பார்வதி
திருக்கல்யாணம்)
சீர்கொண்ட கயிலை
மலைத் திருக்கோயில் வீற்றிருந்து
செம்மையோர் நால்வர்
வேண்டச்
சிற்பரத்து மோன நிலை
காட்டி அருள் தெய்வமே
தெளிவான ஞான வாரி
கார்கண்ட குயிலென்னக்
கவல்கின்ற அமரர்க்காய்க்
கணைகொண்டு வந்த மாரன்
கருத்தழித்த
செயல்கண்டு கனலாலே நீறாக்குங்
கண்கொண்ட கடவுளேயோ
ஏர்கொண்ட கமலத்தோன்
முதலாய தேவர்கள்
என்றென்றும் இனிது
வாழ
இமவான்றன் மகள்
கரத்தை ஏற்றருளி இன்புற்ற
ஏந்தலே என்றும் காக்க
நேர்கொண்ட சீலத்தோர்
திறை கைதை நகரத்து
நின்றோங்கு அத்தி
தலத்து
நிமலனாம் சௌந்தரிய ரூபனென நின்றொளிரும்
நிகரற்ற வேளை நன்கே.
**
No comments:
Post a Comment